தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.10.12

ஆப்கானுக்குள் அமெரிக்கா நுழைந்து பதினொரு வருடங்கள்


ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்கா, நேட்டோ த லைமையிலான கூட்டுப்படைகள் நுழைந்து இன்று டன் பதினொரு வருடங்களாகிறது.கடந்த 2001 ம் ஆ ண்டு அக்டோபர் 7ம் திகதி ஆப்கானிஸ்தானில் தல பான்களை வேரோடு அழித்துவிடும் வீறாப்புடன் பு றப்பட்டது ஆனால் அதனுடைய பணிகள் இன்னமு ம் முடிவடையவில்லை.எதிர்வரும் 2014 டிசம்பருட ன் அமெரிக்கா ஆப்கானில் இருந்து வெளியேறவுள் ளது, இந்த
நிலையில் கடந்த 11 வருடங்களாக போரி ல் வெற்றி கொள்ள முடியாத
அமெரிக்காவின் செயலை தலிபான்கள் கேலி செ ய்துள்ளார்கள்.
இன்றுவரை வெற்றிக் கொடி நாட்ட முடியாத அமெரிக்கா, நேட்டோ இரண்டை யும் தலிபான்களும், ஆப்கான் மக்களும் வென்றுள்ளார்கள் என்றும் கூறியுள் ளனர்.
அமெரிக்கர்களும், நேட்டோவும் ஆப்கான் மண்ணில் வெற்றி பெற முடியாது அவமானப்படுத்தப்பட அல்லாவின் அருளே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆப்கானுக்குள் நுழைந்த 11 வருடங்களும் பயனற்றுப் போய்விட்டதே என்ற கருத்து மேலை நாடுகளில் பரபரப்பாக பேசப்படாத வகையில் அல் குவைடா தலைவர் கொலை தொடர்பான செய்தியொன்றும் பெரும் ஆர்பாட்டமாக வந்து போயுள்ளது.
ஆப்கான் சென்ற அமெரிக்க படைகள் அல் குவைடா தலைவர் பின் லேடனை கொலை செய்தாலும், தலபான் தலைவர் ஓமர் முல்லாவை கொல்ல முடியவில்லை என்பது கவனிக்கத்தக்கது, அவருக்கு என்ன நடந்ததென்பது இன்றுவரை துலக்கமில்லாமலே இருக்கிறது.
இந்த நிலையில் தலபான்கள் வெற்றி களிப்பு செய்தி வெளியிட்டுள்ளனர்.
இந்த நாளின் நினைவோ என்னவோ இன்று ஈராக்கில் 11 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர், இவர்கள் அனைவரும் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
இதில் 10 பேர் ஈராக்கியர் ஒருவர் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்தவராகும், இந்த ஆண்டு மட்டும் ஈராக்கில் 113 பேர் தூக்கில் போடப்பட்டுள்ளார்கள், கடந்த ஆகஸ்ட் 27ம் திகதி ஒரேதரத்தில் 21 பேர் தூக்கிலிட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
மறுபுறம் இன்று டென்மார்க் தலை நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்னால் சுமார் 2000 பேர் ஆர்பாட்டம் நடாத்தினார்கள், இனசன்ற் ஒப் இஸ்லாம் என்ற திரைப்படத்திற்கு எதிராக இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஊர்வலம் அமைதியாக நடைபெற்றது, டென்மார்க்கில் உள்ள முஸ்லீம்கள் மற்றய மதத்தினர் பங்கேற்றனர், ஊர்வலத்தை நடாத்தியவர்கள் சுமார் 5000 பேர் வந்ததாகக் கூறுகிறார்கள்.

0 கருத்துகள்: