தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.10.12

வாடிகன் ரகசியம் கசிவு: போப் ஆண்டவரின் சமையல்காரருக்குச் சிறை


போப் ஆண்டவரின் ரகசிய ஆவணங்களைத் திருடி, அவற்றை ஒரு பத்திரிகையாளரிடம் வழங்கிய வாடிகன் சமையல்காரருக்கு 18 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ரோமன் கத்தோலிக்க தேவாலயத் தலைமையகத்தில் நிலவும் உட்பூசல், ஊழல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கியான்லுகி நுஸி என்ற பத்திரிகையாளர் புத்தகம் எழுதினார்.இந்தப் புத்தகத்துக்காக, போப் ஆண்டவர் எழுதிய கடிதங்கள் அவருக்குத்

தேவைப்பட்டது. அவற்றை போப் மாளிகையில் சமையல்காரராகப் பணிபுரிந்த பாலோ கேப்ரியல் என்பவர் திருடிச்சென்று, கியான்லுகியிடம் ஒப்படைத்தார்.
இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பாலோ கேப்ரியல் மீதான வழக்கு விசாரணை வாடிகன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, "போப்பின் கடிதங்களைத் திருட வேண்டும் என்பது என் நோக்கமல்ல. வாடிகனில் நிலவும் கெடுதல்கள் மற்றும் ஊழல் குறித்து போப் ஆண்டவருக்குத் தெரிவிக்கப்படுவதில்லை என்று நான் கருதினேன்.
இந்தப் புத்தகம் மூலம் அங்குள்ள பிரச்னைகளைப் பகிரங்கப்படுத்தி, தேவாலயம் சரியான பாதையில் செல்லவே அவரது கடிதங்களை எடுத்துக் கசிய விட்டேன்' என்று பாலோ கேப்ரியல் ஒப்புக் கொண்டார்.
இவ்வழக்கில் சனிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. பாலோ கேப்ரியலுக்கு 18 மாதச் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி கியசப்பே டெல்லா தீர்ப்பளித்தார். எனினும், அவருக்கு போப் ஆண்டவர் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வார் என்று வாடிகன் வட்டாரங்கள் தெரிவித்தன.

0 கருத்துகள்: