தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.10.12

துருக்கி சிரியா மீது தாக்குதல் பலர் பலி


துருக்கிய விமானங்கள் நேற்றிரவு சிரிய படைகளி ன் சோதனைச் சாவடியின் மீது தாக்குதலை நடாத்தி பல சிரியப் படைகளை கொன்றொழித்தது.இரவு நேர த் தாக்குதலை நடாத்தினாலும் குறி தவறாமல் இந்த த் தாக்குதல் நடந்தேறியுள்ளதாக துருக்கிய பிரதமர் எர்டோகனின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.நேற்று புதன் சிரியாவில் இருந்து ஏவப்பட்ட மோட்டார் தாக் குதல் காரணமாக துருக்கியின் எல்லைப்புற நகரப்ப குதியில் விழுந்து ஐந்து பேர் மரணித்து ஒன்பதுபேர் படுகாயமடைந்தார்கள்.அதைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் உள்ள ரெல்
அப்யாட் நகர சோதனைச் சாவடி மீது துருக்கிய விமான ங்கள் அதிரடித் தாக்குதல் நடாத்தி பலரை கொன்றொழித்துள்ளன.
இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலையை ஏற்படுத்தியுள்ளது, சிரிய போராளிகள் துருக்கியின் எல்லைப் பகுதியில் பயிற்சி எடுத்தே இரு நாடுகளுக்கும் நடுவே உள்ள மலைப்புறத்தைத் தாண்டி சிரியாவிற்குள் இறங்குவது கவனிக்கத்தக்கது.
மறுபுறம் சிரியாவிற்குள் நுழையும் போராளிகளுக்கு வழியை ஏற்படுத்திக் கொடுக்க எல்லைப்புற காவற் கடவை மீது இப்படியொரு தாக்குதலை நடாத்த வேண்டிய மறைமுகத் தேவை துருக்கிக்கு இருக்கிறது.
மறுபுறம் ஆட்சியில் இருந்து விலக வேண்டிய நிலையில் நூலில் ஆடும் சிரிய அதிபர் ஆஸாட் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நடைபெறும் உள்நாட்டுப் போரை துருக்கிக்கு எதிரான இரு நாட்டுப் போராக மாற்றிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.
ஆபத்தை உணர்ந்து கொண்ட நேட்டோ இந்தத் தாக்குதலைக் காரணம் காட்டி சிரியா வெகுண்டெழுந்து துருக்கியுடன் போரை ஆரம்பிக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளது.
ஊடகங்களில் வெளியாகும் செய்திக்கும் உண்மைக்கும் வெகு தூரம் இருப்பதை இந்த நிகழ்வுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

0 கருத்துகள்: