தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.10.12

திருகோணமலையில் மாதா திருவுருவ சிலை உடைப்பு!


திருகோணமலையின் பாலையூற்று பகுதியில் நிறு வப்பட்டிருந்த மாதா திருவுருவ இனந்தெரியாத நபர் களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.புனித லூர்த்து அன்னை ஆலயத்தின் முன்புறமாக அமைக் கப்பட்டிருந்த குறித்த மாதா சொரூப சிலை, கடந்த யுத்த காலத்தில் கூட எவ்வித பாதிப்புமின்றி அங்கு நிலை கொண்டிருந்ததாகவும், எனினும் யுத்தம் முடி வடைந்த தற்போதைய சூழ்நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளதாகவும், ஆலய பங்குக்குருவானஅருட்திரு, அன்றியாஸ் பெர்ணாண்டோ தெரிவித்து ள்ளார். இது பற்றி காவல்நிலையத்தில் அவர் முறைப்பாடு ஒன்றையும் செய் துள்ளார்.

1974ம் ஆண்டு அருட்திரு.தியோப்பிளஸ் றாகல் என்பவர் பாலையூற்று பங்குத்தந்தையாக கடமை புரிந்த காலத்தில் மேற்படி புனித லூர்த்து அன்னை சொரூபம் நிறுவப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்த நிலையில் வடக்கு கிழக்கு பகுதிகளின் நகர மையங்களில் காணப்படும் பல்வேறு திருவுருவ சிலைகள்  சேதமாக்கப்பட்டு வந்தன. மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் சிலை, சுவாமி விபுலாநந்தர் சிலை, சாரணிய தந்தை சேர் பேடன் பவுல் சிலை, புலவர்மணி பெரியதம்பிள்ளை சிலைகள் என்பனவும், வடக்கில் சங்கிலி மன்னன் சிலையும் அண்மைக்காலத்தில் சேதப்படுத்தப்பட்டிருந்தன. அந்த வரிசையில் தற்போது மாதா திருவுருவ சிலையும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. 

0 கருத்துகள்: