பெற்றுள்ளது' என்று சுகாதாரத்துறைச் செயலாளர் அலெக்ஸ் நீல் தெரிவி த்தார்.ஐக்கிய இராச்சியத்தின் தேசிய சுகாதார சேவைகள் துறை (என்எச்எஸ்) இங்கிலாந்து, ஸ்காட்லாந்து,வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து என ஒவ்வொ ரு அரசுகளிலும் சுயாதீனமாகவே இயங்குகிறது.
இங்கிலாந்தின் என்எச்எஸ் யாப்பின்படி, மருத்துவர் ஒருவரால் சிகிச்சைக்காக பணிக்கப்பட்ட நோயாளி ஒருவரை 18 வாரங்களுக்கு அதிகமான காலத்திற்கு காத்திருக்க வைக்கமுடியாது.
வேல்ஸ் தேசத்தைப் பொருத்தவரை, அங்கு 36 வாரங்களுக்குள் நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்தாக வேண்டியுள்ளது. சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்ட நோயாளிகளில் 95 வீதமானவர்களை 26 வாரங்களுக்குள்ளேயே சிகிச்சைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அங்கு சட்டம் இருக்கிறது.
வட-அயர்லாந்திலும், தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளைத் தவிர, நோயாளிகளை 36 வாரங்களுக்கு மேல் காத்திருக்க வைக்கமுடியாது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக