தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.10.12

பிரான்ஸ்: மாபெரும் புதிய பள்ளிவாசல்! திறப்பு (வீடியோ)


பிரான்ஸ்Strasbourg(Bas-Rhin)நகரம்இன் று தனது மாபெரும் பள்ளிவாசலைத் திறந்துவைத்துள்ளதுஇதற்கான அடிக்கல்29ம் திகதி ஒக்டோபர் மாதம் 2004 ம்ஆண்டு நாட்டப்பட்டதுஇன்றையஆரம்ப வைபவத்தில் கிட்டத்தட்ட 1200பேர் கலந்து கொண்டனர்அதில்பிரான்சின் உள்துறை அமைச்சர்மனுவல் வால்ஸ் 
மற்றும் கத்தோலிக்க யூத மற்றும் பல மதப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.


 

இந்த பள்ளிவாசல் ஏற்கனவே பிரான்சில் உள்ள 2,200 பள்ளிவாசல்களின் பட்டியலில்தன்னையும் இணைத்துக் கொள்கின்றது. 1,300 சதுரமீற்றர்கள் விஸ்தீரணம் கொண்டதொழுகை மண்டபம் ஒரே நேரத்தில் 1500 பேர் தொழுகை செய்யக்கூடியதுஇதுவரைEvry-Courcouronnes  இலிருந்த பள்ளிவாசலே பிரான்சின் மிகப் பெரிய பள்ளிவாசலாகஇருந்ததுஆனால் அந்தப் பெருமையை இப்போது Strasbourg பள்ளிவாசல் தட்டிக்கொண்டுள்ளதுஜரோப்பாவிலும் ரோமிலும் பல பாரிய பள்ளிவாசல்களைக் கட்டியகட்டடக் கலைஞர் Paolo Portoghesi  இடமே இப்பள்ளிவாசல் கட்டும் பொறுப்பும்வழங்கப்பட்டிருந்தது.

 



வழமையாக பள்ளிவாசல்களில் இருக்கும் பெரும் தூண்கள் இப்பள்ளிவாசலில்அமைக்கப்படவில்லைமாறாக பெரும் பூகோள வடிவத்தில் 24 மீற்றர் உயரமும் 16மீற்றர் விட்டமும் கொண்ட மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்தப் பளள்ளிவாசல் கட்ட 10,5 மில்லியன் யூரோக்கள் செலவாகியுள்ளதுஇதற்கானசெலவின் 26% மக்களிடம் அன்பளிப்பு மூலம் பெறப்பட்டும் 37% மொரோக்காஅரசாங்கத்தால் வழங்கப்பட்டும் 14% குவைத் மற்றும் சவுதி அரேபிய அரசுகளாலும்வழங்கப்பட்டுள்ளன.


இந்த விழாவில் கலந்து கொண்ட மனுவல் வால்ஸ் மிகவும் இறுக்கமான உரையைவழங்கினார்.  « இஸ்லாமியர் என்று கூறிக்கொண்டு நாட்டின் பாதுகாப்பிற்கும்அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் இஸ்லாமிய பிரான்ஸ் அல்லாது வேறுநாடுகளிலிருந்து வந்தவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற நான் தயங்கமாட்டேன் »எனப் பள்ளிவாசல் திறப்புவிழாவில் மனுவல் வால்ஸ் திடமாகக் கூறினார். « குழப்பமும் வெறுப்பையும் உருவாக்கும் மதகுருக்கள்பிரிவினைவாதிகள்,அடிப்படைவாதிகள்எமது நாட்டின் அடிப்படை மற்றும் உயர் பண்பான பெண்உரிமையில் இடையூறு செய்வோர்பெண்களை அவர்கள் விருப்பத்திற்கு மாறாகநிர்ப்பந்திப்போர்போன்றோர்க்கு இந்தக் குடியரசில் இடம் இல்லைமதகுருமாரும்இஸ்லாமிய சங்கங்களும் அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் » என்றும்கூறினார்.

 « இனவிரோதமும் அடிப்படைவாதமும் இஸ்லாம் அல்லபிரான்சில் வாழ அல்லதுபிரெஞ்சுப் பிரஜையாக இருக்க யாரும் தமது மத வழக்கங்களையோ வழிபாடுகளையோவிட வேண்டிய அவசியம் இல்லைபிரான்சின் இஸ்லாமியர்கள் தங்கள் பகுத்தறிவாலும்அறிவு முதிர்ச்சியுடனும் அரசோடு இணைந்து இயங்கவேண்டும் » என்று தனதுஉரையைத் தொடர்ந்துள்ளார்.







Ouverture de la Grande Mosquée de Strasbourg par StrasTv நன்றி:பாரிஸ்தமிழ்

0 கருத்துகள்: