ஈரானில், போதை பொருள் கடத்திய குற்றத்திற்காக 10 பேருக்கு புதிதாக மரணதண்டனை நிறைவேற்றப் படவுள்ளது.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சர் வதேச மன்னிப்பு சபை உடனடியாக இக்'கொலை ந டவடிக்கைகளை' நிறுத்துமாறு பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளது.எனினும், இரண்டு முக்கிய போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களுக்கே தாம் இத்தண்டனை விதித்துள்ளதாகவும், இஸ்லா மிய சட்டதிட்டத்தின் படி இது சரியான நடவடிக்கை யே எனவும், நாட்டில் போதைபொருள்
பிரச்சினை பூதாகரமாவதை தடுக்க இ தை தவிர வேறு வழி தம்மிடம் இல்லை எனவும் ஈரானிய அரசு தெரிவித்துள்ள து.
1979ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டதிலிருந்து, இன்று வரை போதை பொருள் கடத்தல் காரர்களுக்கு எதிராக ஈரானிய படைவீரர்கள் மேற்கொண்டுவரும் மோதல்களில் 3,500 ஈரானிய படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக