அமெரிக்காவில் வெளியான இஸ்லாமியர்களுகக்கு எதிரானதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய திரைப்படம் தொடர்பான வீடியோ காட்சிகளையும், இணைப்புக்க ளையும் நீக்காவிட்டால் YouTubeஇணையத் தளத்தை அந்நாட்டில் முற்றாக தடை செய்ய நேரிடும் என அ தன் தகவல் தொடர்பு அமைச்சர் எச்சரிக்கை விடுத் துள்ளார்.இது தொடர்பாக தகவல் தொடர்பு அமைச் சர் நிக்கோலாய் நிக்கிஃ
போரோ தனது டுவிட்டர் தளத்தில் தகவல் அளிக்கை யில், ' இந்த தகவல் கேலிக்கிடமானதாக இருக்கலாம். ஆனால் இந்த வீடியோ காரணமாக YouTube இன் அனைத்து சேவைகளும் ரஷ்யா முழுவதும் தடை செய்யும் நிலைக்கு அவ்விணையத்தளம் தள்ளப் பட்டுள்ளது.' என்றுள்ளார்.ரஷ்யாவில் அமுலில் உள்ள புதிய ஊடக சட்டதிட்டத்தின் படி, இத் தடை உத்தரவைப் பிறப்பிக்க கூடிய சாத்தியத்தை இவர் சுட்டிக் காட்டியுள்ளதுடன் இச் சட்ட மூலம் நவம்பர் 1 இல் இருந்து செயற்படுத்தப் படலாம் எனவும் கூறியுள்ளார்.
இச் சட்டத்தின் மூலம் ரஷ்யாவில் உள்ள சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு ஓர் பாதுகாப்பை கொடுக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ள அவர் குறித்த திரைப்படம் தொடர்பில் சர்ச்சைக்குரிய ஒரு இணையப் பக்கம் காணப்படினும் கூட யூடியூப்பின் முழு சேவைகளையும் தடை செய்ய நேரிடும் என தெரிவித்துள்ளார்.
'The Innocence of Muslims' எனப்படும் முஸ்லிம்களைப் புண்படுத்தும் இத்திரைப்படம் அமெரிக்காவிலுள்ள சில கிறிஸ்தவ மிதவாதிகளால் தயாரிக்கப் பட்டு YouTube இல் அண்மையில் வெளியிடப் பட்டிருந்தது. இதனால் கடந்த ஒரு வாரமாக பல மக்கள் பலியாகும் அளவுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
இதில் முக்கியமாக லிபியாவில் அமெரிக்கத் தூதர் உட்பட 4 அமெரிக்கர்கள் கொல்லப்பட்ட சம்பவமும் இன்று செவ்வாய்க் கிழமை பாகிஸ்தானின் காபுல் நகரின் விமானநிலையத்தில் பெண் தற்கொலைப் போராளி குண்டை வெடிக்கச் செய்ததில் 12 வெளிநாட்டினர் கொல்லப்பட்ட சம்பவமும் அடங்குகின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக