சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இது வரை செயற்பட்டு வந்த திரிபாதி சிறைத்துறைக்கு அதிரடியாக பதவி மாற்றப்பட்டுள்ளார். அவரது பொ றுப்பில் ஜார்ஜ் புதிய கமிஷனராக நியமிக்கபப்ட்டுள் ளார்.கடந்த 4 மாதங்களுக்கு மேலாக திரிபாதி சென் னை மாநகர காவல்துறை ஆணையராக செயற்பட் டுவந்தார். எனினும் சென்னையில் கடந்த மூன்று நாட்களாக இஸ்லாமிய அமைப்புக்களின் அமெரிக்க தூதரகம் முற்றுகை போராட்டம் காவல்துறைக்கு கடும் நெருக்கடியை ஏற்
படுத்தியுள்ள நிலையில், நேற்று 18.9.12 அனைத்து முஸ்லிம்களின் கூட்டமைப்பு போராட்டம் சென்னையின் அண்ணா சாலை ஸ்தம்பிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருந்தது. கடைசியில் காவல்துறையினர் தடியடி நடத்தப்பட்டதில் பலர் மண்டை பிளந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் அதை தொடர்ந்து வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டது இருசக்கரவாகணம் ஒன்று தீவைத்து கொளுத்தப்பட்டது.
போராட்டகாரர்களை கட்டுப்படுத்த தவறினார் எனும் குற்றச்சாட்டின் கீழ், திரிபாரதி இப்பதவி மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் அமெரிக்க தூதரகத்திற்கு எதிரான போராட்டத்தினால், தொடர்ந்து 2வது நாளாக அமெரிக்க தூதரகம் மூடப்படும் நிலைக்கு உள்ளானது.
மேலும் திடீரென அண்ணாசலையில் ஆயிரக்கணக்கில் குவிந்த ஆர்ப்பாட்டக்காரர்களினால் காவல்துறையினர் செய்வதறியாது தடுமாறியதாகவும் விமர்சனம் எழுந்தது. திரிபாதிக்கு பதிலாக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இதுவரை செயற்பட்டு வந்த ஜார்ஜ் புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக