தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.9.12

விலகினார் அன்னா ஹசாரே : தனிக்கட்சி தொடங்குகிறார் அர்விந்த் கேஜ்ரிவால்


சமூக சேவகர் அரவிந்த் கெஜ்ரிவால் தனியாக  அரசி யல் கட்சி தொடங்குவது தொடர்பில் வெளியிட்ட  அ றிக்கைக்கு பின்னர்,அன்னா ஹசாரே - கேஜ்ரிவால் இடையேயான பிளவு அதிகரித்துள்ளது.  நேற்று ஊ ழலுக்கு எதிரான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து, அன்னா ஹசாரே, தமது சக குழுவினரான அர்விந்த் கேஜ்ரிவால், பிரஷாந்த் பூஷன், சாந்தி பூஷன், கிரண் பேடி, சந்தோஷ் ஹெக்டே, மணீஷ் சிசோடியா,
குமா ர் விஸ்வாஸ் ஆகியோரை சந்தித்து கலந்தாலோசனை செய்தார். அப்போது அர்விந்த் கேஜ்ரிவாலின் அரசியல் கட்சி தொடங்கும் யோசனைக்கு ஹசாரே நேரடியாகவே எதிர்ப்பு வெளியிட்டார். இதனால் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாது கலைந்தது.

இதையடுத்து கருத்து தெரிவித்த அன்னா ஹசாரே, கேஜ்ரிவால் அரசியல் கட்சி தொடங்குவது அவரது விருப்பம். அதில் நான் இணைய மாட்டேன். அரசியல் கட்சி தொடங்குபவர்கள் எனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்த கூடாது. அவர்களது கட்சி வெற்றி பெற்றால் எனக்கு மகிழ்ச்சியே. அவர்களுக்கு வாழ்த்துக்கள் என அதிரடி அறிவிப்பு வெளியிட்டார்.

கடந்த முறை அன்னா ஹசாரே தலைமையில் ஊழலுக்கு எதிரான  உண்ணாவிரதப் போராட்டம் நடந்த போது, மக்கள் மத்தியில் அரவிந்த் கெஜ்ரிவால் நன்கு அறிமுகமாகிக்கொண்டார்.  இப்போது அரசியல் கட்சித் துவங்கும் எண்ணத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அன்னா ஹசாரேவின் அறிவிப்பு தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.

எனினும் இது குறித்து யோகா குரு பாபா ராம்தேவுடன் கலந்தாலோசனை செய்ய அவர் தீர்மானித்துள்ளார். அர்விந்த் கேஜ்ரிவால் தனிக்கட்சி தொடங்குவதற்கு  அவரது ஆதரவாளர்கள் பலர் அவருக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தகது.

இதேவேளை இவ்விவகாரம் குறித்து அன்னா ஹசாரேவும்,  பாபா ராம்தேவை நேரடியாக சந்தித்து இதுபற்றிப் பேசியிருப்பதாகவும் தெரிய வருகிறது. அரசியல் கட்சி துவங்கும் எண்ணத்தில் இருக்கும் அரவித் கெஜ்ரிவால், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்களையும் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான உதயகுமாரையும் வந்து சந்தித்து விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அன்னா ஹசாரேவின் முடிவுக்கு ஆதரவாக கிரண் பேடியும் கருத்து தெரிவித்துள்ளார். அரசியலில் இணைய தனக்கும் ஆர்வம் இல்லை என கூறியுள்ள அவர், எனினும் தற்போது ஊழலுக்கு எதிராக போராடுவதற்கு இரண்டு தெரிவுகள் கிடைத்துவிட்டது மகிழ்ச்சியே என அவர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்: