எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டு ரோமுக்குக் கொண்டு வரப்பட்ட 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுவடு ஒன் றில் இயேசு கிறிஸ்து திருமணம்செய்தவர் என்பதற் கு ஆதாரமாக இயேசு மேரியை நோக்கி தனது மனை வி என்று சொல்லும் வாசகம் இடம் பெற்றிருப்பது ந ம்பத்தகுந்த ஆதாரம் அல்ல எனவும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அமெரிக்காவின் ஹார் வார்ட் பல்கலைக் கழக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இக் கல்வெட்டே ஆரம்ப காலக் கிறித்தவர்கள் இயேசு திருமணம் செய்தவர் என நம்புவதற்குக் காரணமான முதலாவது ஆதாரம் எனக் கூறப்படுகின்றது. எனினும் இச்சுவடு யாருக்கு சொந்தமானது என்ற உண்மை தெரியாதிருப்பதுடன் இதன் நோக்கம் காரணமாக இது தடை செய்யப்பட்ட தொல்பொருட்கள் பட்டியலிலேயே சேர்க்கப்பட வேண்டும் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹார்வார்ட் கிறித்தவ பாடசாலையில் பண்டைய கிறித்தவம் பிரிவில் பேராசிரியராகக் கடமையாற்றும் 'Karen King' என்பவர் கூறுகையில Coptic மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த சுவட்டில் உள்ள வாசகம் 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க கல்வெட்டுக்களில் இருந்து மொழி பெயர்க்கப் பட்டதாக இருக்கலாம் என்றுள்ளார். இவரின் அறிக்கை அமெரிக்கப் பத்திரிகைகளை ஈர்த்ததால் புதன்கிழமை அவற்றின் Hot Topic ஆக மாறியுள்ளது.
இன்றுள்ள கிறித்தவ மரபுப் படி இயேசு திருமணம் செய்யாதவர் என்றே கருதப் பட்டு வந்த போதும் இதை ஆணித்தரமாக வலியுறுத்தும் வரலாற்றுச் சான்றுகளும் எதுவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இயேசு திருமணம் செய்தவர் என்றோ அல்லது அவருக்கு பெண் சிஷ்யைகள் உள்ளனர் என்றோ ஆதாரங்கள் இருப்பின் அவை இன்றைய தேவாலயங்களில் பெண்களுக்கு வழங்கப் பட்டு வரும் அந்தஸ்தைப் பெருமளவு பாதிக்கக் கூடும் என்பது முக்கியமானதாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக