தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.9.12

இஸ்லாத்துக்கு எதிரான திரைப்படத்தை நீக்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கைக்கு கூகுள் மறுப்பு


கூகுள் நிறுவனத்திடம் முகமது நபி குறித்த சர்ச்சைக்குரிய வீடியோ பதி வை யூடியூபில் இருந்து நீக்கும் படி அ மெரிக்கா விண்ணப்பித்த கோரிக்கை யை கூகுள் நிறுவனம் நிராகரித்துள்ள து.இந்த வீடியோப் பதிவு காரணமாக வே மத்திய கிழக்கு மட்டுமல்லாது இ ஸ்லாமியர்கள் பரவலாக வாழும் அ னைத்து நாடுகளிலும் அமெரிக்க அரசு மற்றும் அதன் தூதரகங்கள் மீது தாக் குதலும் அச்சுறுத்தலும் விளைவிக்கப் பட்டு வருகின்றது.
இந்நிலையில் கூகிள் நிறுவனம் இந்த விவகாராம் தொட ர்பாக கருத்துரைக்கையில்  இந்த வீடியோப் பதிவு இந்தியாவிலும் இந்தோனே சியாவிலும் சென்சார் செய்யப் பட்டிருப்பதாகவும் புதன்கிழமை எகிப்து மற்றும் லிபியாவில் முற்றாகத் தடை செய்யப் பட்டதாகவும் கூறியுள்ளது.

இஸ்லாமியர்களின் இறை தூதுவர் முகம்மது நபியை அவமரியாதை செய்யும் வகையில் இவ்வீடியோ சித்தரிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இந்நிலையில் கூகிள் நிறுவனம், அரசியல் நியாயங்களால் அல்லாது வேறு எந்த ஒரு சாதாரண சட்டங்களின் பிராகாரமும் இவ்வீடியோ பதிவை முழுமையாக நீக்க முன்வரப் போவதில்லை என்றும் கூறியுள்ளது. எனினும் வெள்ளை மாளிகை, இந்த வீடியோப் பதிவு YouTube இன் சட்டதிட்டங்களை மீறும் விதத்தில் அமைந்திருக்கிறதா என மறுபடி ஒரு முறை அலசிப் பார்க்கும் படி கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கு பதில் அளித்த கூகிள் நிறுவனம்  இவ்வீடியோ முறையான வழி நடத்தல்கள் மற்றும் சட்டப்படியே வெளியிடப் பட்டிருந்தது எனக் கூறியுள்ளது.
இதேவேளை இப்படத்தை தயாரித்த எகிப்தின் கிறிஸ்தவ மத வழி வந்த 'நகௌலாக் பஸ்ஸெலெய்' தெற்கு கலிபோர்னியாவில் வசித்து வந்த போதும் 2010 ஆம் ஆண்டு ஒரு வங்கிக் கொள்ளையில் சம்பந்தப் பட்டு கைது செய்யப் பட்டதுடன் கடந்த வருடம் (2011) ஜூனில் விடுவிக்கப் பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: