தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.9.12

இந்தியை சர்வதேச மொழியாக மாற்ற ஐ.நா தலைமை அலுவலத்தில் தீர்மானம்


சர்வதேச இந்தி மொழி தினம் தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நேற்று தொடங்கியது. சர்வதேச இந்தி மொழி தினம், கடந்த 1975ம் ஆண்டு இந்தியாவில் முதல் முதலாக கொண்டாடப்பட்டது. அதன்பின் மொரீஷியஸ், டிரினிடாட், இங்கிலாந்து, சுரினாம், அமெரிக்கா போன்ற நாடுகளில் கொண்டாடப்பட்டது.இந்நிலையில் 9வது சர்வதேச இந்தி தினம் இன்று ஐநா தலைமை

அலுவலகத்தில் தொடங்கியது. மூன்று நாள் மாநாடு நடக்கிறது. இதில் ஐ.நா.வின் அலுவலக மொழிகளில் இந்தியை சேர்க்க தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்தி தின மாநாட்டை மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பிரனீத் கவுர் மற்றும் தென் ஆப்ரிக்க அமைச்சர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செயலர் (மேற்கு) எம்.கணபதி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஐ.நா.வின் அலுவலக மொழிகளில் இந்தியையும் சேர்க்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் 4 இந்தி மாநாட்டில் இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எனினும் ஐ.நா. உறுப்பு நாடுகளின் ஆதரவை பெறுவதில் சிக்கல்கள் உள்ளன. அந்த சிக்கல்களை தீர்த்து இந்தியை ஐநாவின் அலுவலக மொழியாக கொண்டு வர தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பிரனீத் கவுர் கூறினார். மொழியை அடையா ளம் காணுதல்; இந்தியை உலக மயமாக்கல் என்ற நோக்கில் இந்த ஆண்டு மாநாடு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: