இலங்கையின் சிலாபம் முன்னேஸ்வரம் பத்ரகாளி யம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடு, கோழி பலியிடுதல் திருவிழாவை தடுத்து நிறு த்தப் போவதாக சிங்கள அமைச்சர் மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியுள்ள தாவது:முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோயிலு க்கு நான் 40 ஆண்டுகளாக போய்வருகிறேன். வரும் செப்டம்பர் 1-ந் தேதியன்று ஆலயத்தில் வேள்வி உற் சவம் நடைபெற இருக்கிறது.அன்றைய நாளில் வே ண்டுதலை நிறைவேற்றுவதற்காக ஆடு, கோழிக ளை பலியிட இருக்கின்
றனர். கடந்த ஆண்டும் இது போன்ற பலியிடுதலை நான் தடுத்தேன்.
இந்த ஆண்டும் இதைத் தடுப்பேன். அதனால் ஆடு, கோழி போன்றவற்றை பலியிட எவரும் கொண்டுவரக் கூடாது. எந்த ஒரு மதமும் மிருக பலியை அனுமதிக்கவில்லை. நான் இந்த நாட்டில் உயிரோடு இருக்கும் வரை இப்படியான தவறான செயல்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று மேர்வின் சில்வா கூறியுள்ளார்.
மேர்வின் சில்வாவின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ் அரசியல் கட்சித் தலைவரான மனோ கணேசன், ஆடு, கோழி பலியிடுதலை தாம் விரும்பவில்லை என்றாலும் மேர்வின் சில்வா இந்து மத உணர்வுகளை புண்படுத்தாமல் தமது போராட்டத்தை நடத்த வேண்டும்.
கடந்த ஆண்டு முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோயிலில் மேர்வின் சில்வா கலந்து கொண்ட முறையானது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளார்.
ராஜபக்சேவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ரவுடி அமைச்சர் என பெயரெடுத்தவர் மேர்வின் சில்வா என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக