தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.8.12

சந்திரனில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ரோங் மரணமடைந்தார்


சந்திரனில் முதன் முதலாக காலடி வைத்த, 1930ஆ ம் ஆண்டு பிறந்த அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ரோங் 82ஆவது வயதில் மரணமடைந்தார். இவருக்கு இதயத்தில் ஏற்பட்ட அடைப்புக் காரணமா க இம்மாத ஆரம்பத்தில் அவர் சத்திரசிகிச்சை செய்ய ப்பட்டது. இருப்பினும் அதில் ஏற்பட்ட கோளாறு கார ணமாக அவர் உயிரிழந்துள்ளதாக ஆம்ஸ்ட்ரோங்கி ன் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூ லம் அறியமுடிகின்றது.அமெரிக்கா அப்பல்லோ வி ண்கலம் மூலம் முதன் முதலில் சந்திரனுக்கு அனு ப்பிய மூன்று விண்வெளி
வீரர்களில் நீல் ஆம்ஸ்ட்ரோங்கும் ஒருவர்.
அதன்படி 1969 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 திகதி முதல் மனிதனாக நிலவில் காலடி எடுத்து வைத்ததார். விண்கலம் சந்திரனில் தரை இறங்கியவுடன் நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதன் என்ற பெறுமையை தனதாக்கிகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சில மாதங்களுக்கு முன்னர் தான் சந்திரனில் காலடி எடுத்து வைத்தது உண்மை என்றும், அந்த உண்மையை சந்திரனில் தன்னால் நாட்டப்பட்ட அமெரிக்கக் கொடியே எடுத்துரைக்கும் என்றும் கூறியிருந்தார்.
அதற்கு சில மாதங்களின் பின்னர் நீல் ஆம்ஸ்ரோங் நாட்டிய கொடியை சந்திரத் தரையில் காணவில்லை என்று அமெரிக்கா அறிவித்திருந்தது.
நீ ஆம்ஸ்ரோங் உண்மையிலேயே சந்திரனுக்கு பயணிக்கவில்லை அவை அனைத்தும் அமெரிக்க ஸ்ரூடியோ ஒன்றில் நடாத்தப்பட்ட நாடகம் என்று கொன்ஸ்பிரேசன் கோட்பாடு கூறுகிறது.
மேலும் நீல் ஆம்ஸ்ரோங் நிற்கும்போது விழும் அமெரிக்கக் கொடியின் நிழல் வலதுபக்கமாகவும், அதற்கு அருகில் இருந்த பாறையின் நிழல் இடது பக்கமாகவும் விழுவதை உலகப் புகழ்பெற்ற புகைப்பிடிப்பாளர் ஒருவர் அடையாளம் காட்டியிருந்தார்.
பல கோணங்களில் போக்கஸ் விளக்குகள் அடித்து ஒரு புகைப்படத்தை எடுத்தால் நிழல் பல கோணங்களில் விழும் என்றும் அவர் கூறியிருந்தார்.
மேலும் நீல் ஆம்ஸ்ரோங்கை அனுப்பிய பின்னர் பல அப்பலோக்களை ஆளில்லாமல் அனுப்பிய அமெரிக்க அதற்குப் பிறகு மனிதனை அனுப்ப இன்றுவரை முயற்சி எடுக்காதது ஏன்.. என்ற கேள்விகள் உள்ளன.
அடுத்த ஆண்டு சீனா மனிதனை சந்திரனுக்கு அனுப்ப இருக்னிறது, 2016 ல் இந்தியா அனுப்பவுள்ளது, இதற்குள் எழக்கூடிய வாதங்களுக்கு பதில் தரவேண்டிய ஒருவர் மரணித்துள்ளது கவலை தருவதாகவே உள்ளது.
சந்திரனில் முதன் முதலாக காலடி வைத்த முதல் அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ரோங் இயற்கை எய்தியுள்ளார்.1930ஆம் ஆண்டு பிறந்த நீல் ஆம்ஸ்ட்ரோங் தனது 82ஆவது வயதில் இயற்கையினை எய்தியுள்ளார்.

0 கருத்துகள்: