தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.8.12

தானம் செய்த சிறுநீரகத்தை குப்பையில் வீசிய நர்சு


அமெரிக்காவில் ஒகியோ பல்கலைக்கழகத்தில் டெலடோ மெடிக்கல் சென்டர் உள்ளது. இங்குள்ள ஆஸ்பத்திரியில் ஒரு பெண்ணுக்கு சிறுநீரக ஆபரேசன் செய்ய வேண்டியிருந்தது. அதற்காக அவரது சகோதரர் தனது சிறுநீரகத்தை தானம் செய் து இருந்தார். அதை ஆபரேசன் மூலம் அகற்றி நோயாளியின் உடலில் பொருத்த பத்திரமாக வைத்து இருந்தனர்.இந்த நி லையில் அதை ஆபரேசன் மூலம் அகற்றிய மற்ற கழிவு உறுப்புகளுடன் சேர்த்து ஒரு நர்சு குப்பையில் வீசி எறிந்து விட்டார். குப்பை கழிவுகளுடன் சேர்த்து சிறுநீரகத்தை ஊழி யர்கள் தேடி எடுத்தனர்.
ஆனால் உடலில் இருந்து ஆபரேசன் செய்து எடுக்க ப்பட்டு ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆகிவிட்டதால் சிறுநீரகம் முற்றிலும் நாசம் அடைந்து விட்டது.
இதனால் அதை நோயாளியின் உடலில் பொருத்த முடியவில்லை. இந்த சம்பவத்துக்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் மிகுந்த வருத்தம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற சம்பவம் நடப்பது மிகவும் அரிது என டெலடோ லூகாஸ் சுகாதார துறை கமிஷனர் டேவிட் கிராஸ்மேன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: