தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.8.12

அமெரிக்க ஆர்வலரை புல்டோசர் ஏற்றி கொன்ற இஸ்ரேலிய இராணுவ வீரர் விடுதலை.


மத்தியகிழக்கின் காசாவில் 2003ஆம் ஆண்டு இஸ்ரேலிய இராணுவ புல்டோசர் ஏறி உயிரிழந்த அமெரிக்க ஆர்வலர் ரேச்சல் கோர்ரியின் மரணத்தில் இஸ்ரேல் தரப்பில் எவ்விதப் பிழையும் இல்லை என்று இஸ்ரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கவனக்குறைவாக நடந்து கோர்ரிக்கு மரணத்தை ஏற்படுத்தியதாக முறையிட்டு இஸ்ரேலிய பாதுகாப்புத் துறைக்கு எதிராக கோர்ரியின் குடும்பத்தார் சிவில் வழக்கு

ஒன்றை கொண்டுவந்திருந்தனர்.
23 வயது ரேச்சல் கோர்ரியின் மரணம் "வருந்தத்தக்க விபத்து" என்று தனது தீர்ப்பில் கூறியுள்ள நீதிபதி, இஸ்ரேலுக்கு அந்த மரணத்துக்கு எவ்வகையிலும் பொறுப்பாகாது என்று முடிவு தெரிவித்துள்ளார்.
காசாவில் பாலஸ்தீனர்களின் வீடுகள் இடிக்கப்பட்டதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது ரேச்சல் கோர்ரி புல்டோசர் ஏறி இறந்திருந்தார்.
மோதல் பிரதேசம் என்று நிர்ணயிக்கப்பட்ட ஒரு இடத்தில் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுத்திருந்தவர் ரேச்சல் கோர்ரி என ஹைஃபா நகர நீதிமன்றத்தின் நீதிபதி ஒடட் கெர்ஷன் கூறினார்.

0 கருத்துகள்: