மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தீவிரவா தத் தாக்குதலில் ஈடுபட்டதாக, தூக்கு தண்டனை வி திக்கப்பட்ட பாகிஸ்தான் பிரஜையான முகமது அஜ் மல் அமிர் கஸாப்பின் தண்டனையை உச்சநீதிமன் றம் உறுதி செய்தது.நியாயமான விசாரணை நடை பெறவில்லை என்ற கஸாப் தரப்பு வாதத்தை நீதிபதி கள் நிராகரித்துவிட்டனர்.கஸாப் மிக்கடுமையான குற்றச் செயலலில் ஈடுபட்டதாலும், நாட்டுக்கு எதி ராக போர் தொடுத்ததாலும் அவருக்கு
விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி
செய்வதைத் தவிர எங்களுக்கு மாற்று வழி இல் லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஃப்தாப் ஆலம் மற்றும் சி.கே. பிரசாத் ஆகியோர் தீர்ப்பளித்தனர்.விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி
விசாரணைக்கு முந்தைய கட்டத்தில் கஸாப்புக்கு வழக்கறிஞரை நியமிக்க அரசு தவறிய காரணத்தால், சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அரசுத் தரப்பில், மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் ஆஜரானார். இந்த வழக்கில், உச்சநீதிமன்றத்துக்கு உதவ, மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருந்தார்.
24 வயதான கஸாப்புக்கு கொலை, தீவிரவாதத் செயல் மற்றும் நாட்டுக்கு எதிராகப் போர் தொடு்ததல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் தூக்கு தண்டனை வழங்கியது. பிறகு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது மேல்முறையீட்டு மனுவை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
வெளிநாட்டினர் உள்பட 166 பொதுமக்களும், 9 துப்பாக்கிதாரிகளும் மும்பை சம்பவத்தில் கொல்லப்பட்டார்கள். கஸாப்பும் அவரது கூட்டாளிகளும் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி, கராச்சியில் இருந்து கடல் மார்க்கமாக தெற்கு மும்பைக்கு வந்திறங்கி, மும்பையின் பல்வேறு இடங்களில் பொதுமக்களை தாறுமாறாக சுட்டுத் தள்ளியதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர்களில் கஸாப் மட்டுமே உயிருடன் பிடிக்கப்பட்டார். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் நடந்த தாக்குதலில் கஸாப் ஈடுபட்டதாகவும் அதில் 52 பேரை அவர் சுட்டுக் கொன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொயிபா தீவிரவாத அமைப்புத்தான் இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என இந்தியா குற்றம் சாட்டியது. முதலில் இதை மறுத்த பாகிஸ்தான், பின்னர், மும்பை சம்பவத்தின் ஒரு பகுதி, பாகிஸ்தான் மண்ணில் திட்டமிடப்பட்டது என்றும், கஸாப் பாகிஸ்தான் பிரஜை என்றும் ஒப்புக்கொண்டது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, கஸாப் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம். முதலில், இதே நீதிபதிகள் கொண்ட பெஞ்சிடம் அவர் மனுத்தாக்கல் செய்யலாம். அதன்பிறகு, வேறு நீதிபதிகள் கொண்ட பெஞ்சிடம் தாக்கல் செய்யலாம்.
அதன்பிறகு, கடைசி வாய்ப்பாக, குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத்தாக்கல் செய்யவும் கஸாப்புக்கு வழி இருக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக