தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.8.12

சிரியா விமானங்கள் பறப்பதை தடுக்க துருக்கி அமெரிக்கா முயற்சி


கம்பளி மூட்டை என்று கருதி சிரியா கரடியை பிடித் துவிட்ட துருக்கி  நேற்று சனிக்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிளரி கிளின்டன் துருக்கி சென்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்ச ர் அக்மாட் ராவ்யுரொலுகுவுடன் சிரியா தொடர்பான பேச்சுக்களை நடாத்தினார்.ஆஸாட்டின் விமானங் கள் நாடாத்தும் கண்மூடித்தனமான தாக்குதல்களே போராளிகள் பின்னடைவை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது
என்று இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.சிரியாவுக்கு எ திராக ஐ.நாவில் தீர்மானத்தை கொண்டுவர ரஸ்யா – சீனா இரண்டும் போடும் முட்டுக்கட்டைகளை ஒரு புறம் தூக்கி வைத்துவிட்டு, துருக்கி – அமெரிக்கா இணைந்து ஒரு போர் வியூகத்தை வகுக்கலாமா என்றும் இரு தலைவர்களும் பேசினார்கள்.
அத்தருணம் போராளிகள் நிலைகொண்டுள்ள நகரங்களின் மீது சிரிய விமானங்கள் பறக்கக்கூடாது என்ற தடையை விதிக்கலாம் என்ற யோசனை முன் வைக்கப்பட்டது.
இப்படியொரு தடை விதித்தால் சிரிய விமானங்களுக்கு எதிராக ஏவுகணைகளை பாவிக்க வேண்டும், விமான எதிர்ப்பு தாக்குதலை நடாத்த வேண்டும், இதற்கு பிரதான தளமாக துருக்கியே இருக்கவும் வேண்டும்.
மறுபுறம் இதை எதிர்த்து, பலமிக்க ஏவுகணைகளை ரஸ்யா ஆஸாட் படைகளுக்கு வழங்க வாய்ப்பிருக்கிறது, ஆகவேதான் பிரேரணையை நுட்பமாக ஆராய்ந்து பதில் தருவதாக துருக்கி வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்தார்.
ஆஸாட்டின் விமானப்படையை முடக்காமல் அவரை பதவியில் இருந்து வெளியேற்ற முடியாது என்பது தெரிந்ததே.
இந்த சம்பவம் துருக்கியை மீள முடியாத பொறிக்கிடங்கில் சிக்க வைக்கக் கூடிய அபாயமிக்கது என்பதை மறுக்க இயலாது, ஆனால் கம்பளி மூட்டை என்று கருதி சிரியா கரடியை பிடித்துவிட்ட துருக்கி மெல்ல மெல்ல நிரோடு நீராக அடித்துச் செல்லப்படுகிறது.
மறுபுறம் துருக்கியுடன் மோதலைத் தவிர்த்து ஜோர்டானுடன் போரை ஆரம்பிக்க ஆஸாட் முயன்றுள்ளார்.
நேற்று ஜோர்டான் எல்லைப் பகுதியில் ஜோர்டானிய – சிரிய படைகள் பலமான தாக்குதல்களை நடாத்தியுள்ளன.
இத்தனை சிக்கல்களினதும் பிரதான விதையாக இருப்பது ஈரானே, இந்தப் போரின் இறுதி அந்தமாக இருப்பது ஈரான் என்பது இப்போது துலக்கமாக தெரிகிறது.
இந்தப் பேச்சுக்கள் நடைபெற ஈரானின் வடமேற்கு புறத்தே இரண்டு நகரங்களில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சுமார் 1.5 மில்லியன் மக்கள் வாழும் ரிப்ரிஸ் நகரத்திற்கு வடமேற்கே 60 கி.மீ தொலைவில் 6.5, 6.3 ரிக்கடர் அளவுகளில் நில நடுக்கம் ஏற்பட்டது.
இதுவரை கிடைத்த தகவல்களின்படி 250 பேர் மடிந்துள்ளார்கள்.
மத்திய கிழக்கில் மிகப்பெரிய சத்திரசிகிச்சை நடைபெற ஆரம்பித்துள்ளது.
நோஸ்ரடாம் என்ற தீர்க்கதரிசி மத்தியகிழக்கில் நடைபெறும் போர் 30 வருடங்கள் நடைபெறும் என்றும், கடைசியில் பிரான்சில் சில இஸ்லாமிய தலைவர்கள் சரணடைய அது நிறைவடையும் என்றும் கூறியிருந்தது.
இது புனையப்பட்ட கட்டுக்கதையாக இருந்தாலும், இப்படியாக வகுக்கப்பட்ட போர் வியூகத்திற்காக புனையப்பட்ட கற்பனை என்பதையும் சிந்தனைக்கு எடுப்பதில் தவறென்ன இருக்கப்போகிறது.
அதேவேளை பிரிட்டனை நம்பி சதாம் உசேனைக் கைவிட்ட கடாபிக்கு நடந்த கதியை துருக்கி மறந்திருப்பது கவனிக்கத்தக்கது.

0 கருத்துகள்: