ஈரானில் நேற்று இடம்பெற்ற இரட்டை நிலநடுக்கத் தில் உயிரிழந்தோர் தொகை 250 ஐ கடந்துள்ளதாக உள்ளூர் தொலைக்காட்சிகள் தகவல் வெளியிட்டு ள்ளன.மேலும் உள்ளூர் தொலைக்காட்சிகள் வெளி யிட்டுள்ள புகைப்படங்கள், வீடியோக்களில், பெரு மளவிலான ஈரானிய பொதுமக்கள் பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டி ருப்பதும், காலநிலையையும் பொருட்படுத்தாது இர வு வேளைகளிலும், வீடுக
ளிலிருந்து வெளியேறி தெருக்களிலேயே அச்சத்தி ல் உறைந்திருப்பதுமாக காட்சிகள் காண்பிக்கப்பட்டுள்ளன.நேற்று மாலை உள்ளூர் நேரம் 4.53 மணியளவில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கம், ஈரானின் தப்ரிஷ் நகரின் 60 கி.மீ க்கு அப்பால், 9.9 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டது. 6.4 மேக்னிடியூட்டாக இந்நிலநடுக்கம் பதிவாகியது. 11 நிமிடங்களில், தப்ரிஷுக்கு 48 கி.மீ தொலைவில், 9.8 கிலோ மீற்றர் ஆழத்தில், இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.3 மேக்னிடியூட்டாக இந்நிலநடுக்கம் பதிவானது.
இவ்விரு நிலநடுக்கங்களினால், ஈரானின் கிழக்கு மாகணமான அசர்பஜானின் அஹார், ஹாரிஸ், வர்ஷகான் போன்ற நகரங்கள் முற்றாக பாதிப்படைந்துள்ளன. மேலும் குறைந்தது 6 கிராமங்கள், 50-80 சதவீத அழிவை சந்தித்துள்ளன.
பூமியின் நில அதிர்ச்சி சார்ந்த கோடுகளுக்கு அருகில் ஈரான் அமைந்திருப்பதால் அங்கு பூகம்பங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. தினந்தோறும் மிகச்சிறிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஒரு நிலநடுக்கமாவது அங்கு நடைபெறுவதுண்டு எனவும், பெரும்பாலான நேரங்களில் இது மக்களால் உணரப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2003ம் ஆண்டு ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 26,000 ற்கு பேற்பட்டோர் பலியாகியிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக