தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.7.12

யாசர் அரபாத் விஷம் வைத்து கொல்லப்பட்டாரா? வழக்கு தொடர மனைவி சுகா முடிவு


பாலஸ்தீனத்தின் தலைவர் யாசர் அரபாத், விஷம் வைத்து கொல்லப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்த அவரது மனைவி சுகா வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.பாலஸ்தீன விடுதலைக்காக 40 ஆண்டு காலம் போராடியவர் யாசர் அராபத். கடந்த 2004ஆம் ஆண்டு, நவம்பர் 11ஆம் திகதி இவர் பாரிஸ் புறநகரில் உள்ள மருத்துவமனையில் இறந்தார்.அராபத் இறக்கும் போது
அவரது உடலில் கொடிய விஷமான பொலொனியம் இருந்துள்ளது
என சுவிட்சர்லாந்து நாட்டு ஆய்வகம் சமீபத்தில் ஆய்வு அறிக்கையை வெளியிட்டது.
மேலும், அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டார் என்பதை உறுதியாக நிரூபிக்க வேண்டுமென்றால், அவர் உடலை மீண்டும் தோண்டியெடுத்து தான் ஆராய்ச்சி செய்ய வேண்டும், அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என கோரும் உரிமை அராபத்தின் மனைவி சுகாவுக்கு மட்டுமே உள்ளது என சுவிட்சர்லாந்து நாட்டின் கதிர்வீச்சு இயற்பியல் துறை தலைவர் பிரான்காய்ஸ் புக்கட் தெரிவித்திருந்தார்.
பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள, ரமலாவில் அடக்கம் செய்யப்பட்ட, யாசர் அராபத்தின் உடலை மீண்டும் தோண்டியெடுத்து, பரிசோதனை செய்ய பாலஸ்தீன நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
யாசர் அராபத் மரணம் குறித்து விசாரணை நடத்தும்படி, பிரான்ஸ் அரசிடம் சட்ட ரீதியாக அவரது மனைவி சுகா அணுக உள்ளதாக வழக்கறிஞர் பியாரி ஆலிவர் சர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: