ஈராக், ஆப்கான் போர்க்களங்களில் இருந்து அமெரி க்கா வெளியேறுவதால் அமெரிக்காவின் இராணுவ பிரசன்னம் குறைந்துவிட்டதாகக் கருதமுடியாது.த ற்போது உலகம் முழுவதையும் அமெரிக்கா மிக நவீ ன பாணியில் சுற்றிவளைக்க ஆரம்பித்திருப்பதாக வோஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் வைன் தெரிவித்தார்.இவருடைய கருத்தை மேற் கோள் காட்டி டென்மார்க் பொலிற்றிக்கன் விசேட செய்தி வெளியிட்டுள்ளது.பிரமாண்டமான படை களை எதிரி நாடுகளை நோக்கி நகர்த்துவதைவிட உலகம் முழுவதையும்
சிறு சிறு புள்ளிகள் போட்டது போல அடையாளப்படு த்தி அங்கு இராணுவத் தளங்களை அமைத்து நெருக்கி வருகிறது அமெரிக்கா.
சிறு சிறு புள்ளிகள் போட்டது போல அடையாளப்படு த்தி அங்கு இராணுவத் தளங்களை அமைத்து நெருக்கி வருகிறது அமெரிக்கா.
அமெரிக்கக் கவிஞரான லிலிபாட்ஸ்சின் குறியீட்டு பெயரில் இந்த இரகசிய நகர்வு ஆரம்பித்து வெகு ஆழமாக ஊடுருவிவிட்டதாகவும் அவர் கூறினார்.
சுமார் 20 பேரில் இருந்து 200 கொமாண்டோ படைகள் கொண்ட படைத் தளங்களை அது வெகு வேகமாக நிறுவிச் செல்கிறது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரைத் தொடர்ந்து அமெரிக்கா எடுத்துள்ள புதிய அடி இதுவாகும்.
இரகசியமாக அமைக்கப்பட்டு வரும் லில்லிபாட்ஸ் முகாம்களை இணைத்தால் உலகம் முழுவதையும் ஒரு வலைபோல அவை மூடிவிடும் என்பது கருத்தாகும்.
அமெரிக்கா இன்று அடைந்துள்ள புதுவகையான போரியல் வளர்ச்சிக்கு அதிக படைகள் தேவையில்லை ஆனால் உலகம் முழுவதையும் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் தளங்களே அவசியமாகும்.
அமெரிக்காவின் இந்த நகர்வு போர்த்துறையில் அது உலகம் அறியாத வகையில் அடைந்துள்ள மர்மமான வளர்ச்சியின் இன்னொரு வெளிப்பாடே இதுவாகும்.
இதேபோல ஆப்கான் மலைக்குகைகளில் மறைந்து தாக்குதல் நடாத்தும் தலபான்களின் காலமும் வெகு விரைவில் முடிவுக்கு வரப்போவதாகவும் வேறு சில செய்திகள் கூறுகின்றன.
ஒவ்வொரு மலைக்குகை பொந்துக்கு முன்னால் வெடிக்கும் குண்டுகள் ஏற்படுத்தும் பகாசுர காற்றழுத்தம் தலபான்களை குகைக்குள்ளேயே வீசியெறிந்து சங்காரம் பண்ணக் கூடியவை.
உலகின் போர் வடிவம் அடி தலையாக மாற ஆரம்பித்துள்ளது, அமெரிக்கா யாருக்கும் தெரியாமல் வேகமாக நகர்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக