தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.7.12

குவைத் நாட்டுக்கு ஏவுகணைகளை விற்க அமெரிக்கா திட்டம்

குவைத் நாட்டுக்கு 4.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள 60 பேட்ரியாட் ஏவுகணைகளை விற்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது என்று பென்டகன் கூறியுள்ளது. ஈரான் நாட்டின் தாக்குதலிலிருந்து தங்கள் நாட்டை த் தற்காத்துக் கொள்வதற்காக குவைத் நாடு இவ்வ கை ஏவுகணைகளை வாங்குகிறது என்றும் இதுகுறி த்து கடந்த 20-ம் தேதி அமெரிக்க காங்கிரஸ் செனட் சபையின் அனுமதிக்கு
அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தங்கள் எதிர்ப்புகள் ஏதேனும் இருந்தால் தெரிவிக்க அமெரிக்க காங்கிரஸ் சபை 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளதாகவும் அமெரிக்க ராணுவப் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு நேற்று வெளியிட்ட இணையதள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது. 

4.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள மிக அதிநவீன 60 பேட்ரியாட் விற்பனையில் 20 ஏவுதளங்களும் நான்கு ரேடார் மற்றும் கட்டுப்பாட்டு அறைகளும் இதை இயக்குவதற்கான பயிற்சி மற்றும் பயிற்சி உபகரணங்களும் உதிரிபாகங்களும் அடங்கும்.

0 கருத்துகள்: