தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சேலையூரில் இயங்கி வரும் சியோன் மெட்ரிகுலேசன் பள்ளிக்காக குத்தகையின் அடிப்படையில் விடப்பட்ட பெருங்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் என்பவருக்கு சொந்தமான பேருந்தில் வரதராஜபுரம், பி.டி.சி. குவார்ட்டர்ஸ், 2-வது பிளாக்கில் வசித்து வரும் சேதுமாதவன் என்பவரின் மகள், இரண்டாம் வகுப்பு மாணவி சுருதி, 25.7.2012 அன்று மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, பேருந்திலிருந்த துவாரம் வழியாக கீழே விழுந்ததில் பேருந்தின் பின்
சக்கரம் ஏறி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள் என்ற செய்தியை அறிந்து நான் மிக்க துயறுற்றேன்.
சக்கரம் ஏறி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள் என்ற செய்தியை அறிந்து நான் மிக்க துயறுற்றேன்.
பழுதுள்ள பேருந்தை, குத்தகையின் அடிப்படையில், பள்ளி வாகனமாக இயக்கியதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் துறை மற்றும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்த மாணவி சுருதியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த சுருதியின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தர விட்டுள்ளேன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக