குடியரசு தலைவர் பதவிக்கு, பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜி. அப்துல் கலாம் ஆகியோரின் பெயர்கள் புதிதாக பரிந்துரைக்கப் பட்டிருப்பது காங்கிரஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சமாஜ்யவாதி கட்சி யின் தலைவர் முலாயம் சிங்குடன் திரிணாமுல் காங் கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இன்று மாலை நடத்தி ய பேச்சுக்களின் பின்னர் இருவரும் இணைந்து இப்பு திய பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். எனது சகோதரி மமதா பானர்ஜியுடன்
கலந்துரையாடிய பின் னர் நாங்கள் ஒன்றாக இணைந்து
ஒரு முடிவெடுத்துள்ளோம். சோம்னாத் சட் டர்ஜி, அப்துல் கலாம் அல்லது பிரதமர் மன்மோகன் சிங் இம்மூவரில் ஒருவரையே நாம் குடியரசு தலைவருக்கு பரிந்துரைக்கிறோம் என முலாயம் சிங் தெரிவித்தார்.கலந்துரையாடிய பின் னர் நாங்கள் ஒன்றாக இணைந்து
இந்த அறிவிப்பு காங்கிரஸுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த மம்தா பானர்ஜி இன்று நண்பகல் வரை தொடர்ச்சியாக நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில், பிரணாப் முகர்ஜியே தமது முதல் தெரிவென காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெளிவாக எடுத்துக்கூறியிருந்தார்.
எனினும் முலாயம் சிங்குடன் பேசிவிட்டு தமது முடிவை சொல்வதாக கூறி மமதா பானர்ஜி விடைபெற்றுக்கொண்டார். இந்நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குடியரசு தலைவர் வேட்பாளருக்கு இந்திய பிரதமர் ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக