நரேந்திர மோடியை விமர்சித்ததின் விளைவாக பிரபல மனித உரிமை ஆர்வலரான ஷபானா ஆஸ்மிக்கு அவருடைய ஃபேஸ் புக் தளத்தில் நரேந்திர மோடியின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.கடந்த 24ஆம் தேதி என்.டி.டி.வி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷபானா ஆஸ்மி நரேந்திர மோடிக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் ஃபேஸ் புக் தளத்தில் ஆபாசமான வார்த்தைகளை கொண்டு ஷபானா ஆஸ்மியை திட்டியதோடு மட்டுமல்லாமல் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனை தொடந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர்களது ஃபேஸ்புக் கணக்குகளை முடக்க வேண்டுமென காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
சமூக தளங்களின் மூலமாக ஆபாச வார்த்தைகளால் மிரட்டப்பட்ட ஷபானா ஆஸ்மி முதலில் டெல்லியிலுள்ள சைபர் க்ரைம் அலுவலகத்திற்கு புகார் அளிப்பதற்காக சென்றுள்ளார். அங்குள்ள அதிகாரிகளை அருகிலுள்ள காவல் நிலையத்திலேயே புகார் அளியுங்கள் என்று கூற திலக் மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். காவல்துறையினர் முறையான நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் இது தொடர்பாக நீதிமன்றம் அனுகுவதற்கு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
"கடந்த மே 24ஆம் தேதி அன்று என்டிடிவியின் சார்பாக பிரைம் டைம் நிகழ்ச்சிக்காக என்னை அழைத்தனர். இதில் கலந்து கொண்டு என்னுடைய கருத்துக்களை பதிவு செய்திருந்தேன் மே 26ஆம் தேதி அன்று என்னுடைய நண்பர்கள் சிலர் என்னை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு எனக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளதாகவும், என்னுடைய ஃபேஸ்புக் தளத்தை பார்வையிடுமாறும் கூறினர். அதனை பார்த்த போது நான் மிகுந்த அதிர்ச்சியுற்றேன். காரணம் அந்தளவிற்கு அசிங்கமாகவும் ஆபாசமான வார்த்தைகளை கொண்டும் என்னை விமர்சித்திருந்தனர்" இவ்வாறு ஷபானா ஆஸ்மி தன்னுடைய புகாரில் தெரிவித்திருக்கிறார்.
"ஒரு பெண் என்ற ரீதியில் மட்டுமல்லாமல் ஒரு சமூக ஆர்வலர் என்ற அடிப்படையில் என் மனதை மிகவும் புண்படுத்தியுள்ளது. என்னுடைய பேச்சு சுதந்திரத்திற்கு விடப்பட்ட மிரட்டலாகவே இதனை கருதுகிறேன். அசிங்கமான வார்தைகளைக்கொண்டும், ஆபாசமான வார்த்தைகளைக்கொண்டு அவர்கள் திட்டியிருப்பது பொதுமக்களிடையே எனக்கு மிகப்பெரும் இழுக்கை ஏற்படுத்தியிருப்பதாகவே நான் கருதுகிறேன். என்னை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். நாடுமுழுவதும் பல்வேறு இடங்களுக்கு குறிப்பாக குஜராத் மாநிலத்திற்கும் சென்று வருகிறேன். இனி என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நான் உணருகிறேன்." என மேலும் அவர் கூறினார்.
பிரிஜேஷ் பட்டேல் என்பவன் தான் முதன் முதலில் என்னை விமர்சித்துள்ளான். (தொலைபேசி எண்: 9825216616 , https://www.facebook.com/ brijesh1974,).(இவனது ஃபேஸ்புக் தளத்தை பார்வையிட்ட போது இவன் முழுக்க முழுக்க ஃபாசிஸ சிந்தனை கொண்ட பயங்கரவாதி என்பதை அறிந்து கொள்ளலாம்)
அவர்கள் அனைவரும் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஷபானா ஆஸ்மி பல்வேறு துறைகளில் சமூக ஆர்வலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக