தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.6.12

நகீ அஹ்மத்:இன்ஃபார்மரா? இந்திய முஜாஹீதீனா?


மும்பை:2011 ஜூலை மாதம் 27 பேரின் மரணத்திற்கு காரணமான குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நகீ அஹ்மத் இந்தியன் முஜாஹிதீன் தலைவர் யாஸின் பட்கலுடன் ஃபேஸ்புக் மூலம் 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்புகொண்டுள்ளதாக மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படை ஏ.டி.எஸ் புதுக்கதையை தயாரித்துள்ளது.பீகார் மாநிலத்தின் தர்பங்கா மாவட்டத்தைச் சார்ந்த நகீ அஹ்மத், போலி ஆவணங்களை உபயோகித்து சிம்கார்டுகளை பெற முயற்சித்தார் என குற்றம் சாட்டி கடந்த ஜனவரி மாதம் 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
தாதர், ஜவேரி பஸார், ஓபரா ஹவுஸ் ஆகிய இடங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த இந்தியன் முஜாஹிதீன் இந்த சிம் கார்டுகளை உபயோகித்ததாக ஏ.டி.எஸ் குற்றம் சாட்டுகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இதர நபர்களான நதீம், வகாஸ் ஆகியோரும் யாஸீனுடன் ஃபேஸ் புக் மூலமாக தொடர்பு கொண்டிருந்ததாக அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மையான பெயரை ஃபேஸ்புக்கில் உபயோகித்தார்களா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. ஃபேஸ்புக் அக்கவுண்ட் தற்போதும் உள்ளதா? என்ற கேள்விக்கும் பதில் இல்லை.
ஆனால், இவ்வழக்கில் போலீசாருக்கு உதவிய இன்ஃபார்மராக செயல்பட்டேன் என்று நகீ அஹ்மத் கூறுகிறார். நகீ போலீஸ் இன்ஃபார்மர் என்றும், குண்டுவெடிப்பு வழக்கில் போலீஸ் அவனை சிக்கவைத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டி அவரது சகோதரர் தேசிய மனித உரிமை கமிஷன், சிறுபான்மை கமிஷன், டெல்லி கமிஷனர், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு புகார் அளித்திருந்தார்.
அண்மையில் ஏ.டி.எஸ் 4788 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
News@thoothu

0 கருத்துகள்: