வாகனம் ஓட்ட அனுமதிக்கக் கோரி, சவுதி அரேபிய பெண்கள், அந்நாட்டு மன்னரிடம் மனு அளித்துள்ளனர்.சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஓட்டுரிமை இல்லாமல் இருந்தது. வரும் 2015ம் ஆண்டு, நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டளிக்க, தற்போது பெண்களுக்கு உரிமை அளிக்கப்பட்டு உள்ளது.இந்த நாட்டில் பெண்கள் கார் ஓட்டுவது குற்றமாக கருதப்படுகிறது.சவுதியின் பெண்ணுரிமை இயக்க தலைவர் மனால் அல் ஷெரீப், தான் கார் ஓட்டும் காட்சியை இணைய
தளத்தில் வெளியிட்டதற்காக முன்பு கைது செய்யப்பட்டார். பின்பு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். கார் ஓட்ட உரிமை அளிக்கும்படி கோரி, சமீபத்தில் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிசிடம் மனு கொடுத்தார்.
600 பெண்கள் இந்த மனுவில் கையெழுத்திட்டிருந்தனர்."ஓட்டுரிமைக்கு ஒப்புதல் அளித்துள்ள மன்னர், பெண்கள் வாகனம் ஓட்டவும் அனுமதிக்க வேண்டும், என இவர் கோரியுள்ளனர். அண்டை நாடுகளில் வாகனம் ஓட்டும் உரிமம் பெற்ற பெண்களையாவது சவுதியில் வாகனங்களை ஓட்ட அனுமதிக்க வேண்டும். இந்த நடைமுறை கடவுள் வழிபாட்டுக்கு எதிரானதல்ல' என, மனால் மனுவில் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக