தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.6.12

அப்துல் கலாம் ஏன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை? வெளிவந்த உண்மைகள்


குடியரசு தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் போட்டியிட மறுத்ததற்கான காரணங்கள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. சகோதரர் மற்றும் ஆசிரியர் ஆகியோரின் ஆலோசனைக்கு பிறகே கலாம் இந்த முடிவை எடுத்ததாக தெரிய வந்துள்ளது. நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட கலாம், பலரும் தாம் போட்டியிட வேண்டுமென்று விரும்பி ஆதரவு தெரிவித்துள்ளதற்கு நன்றி கூறியுள்ளார். எனினும் தற்போதைய அரசியல் சூழலில் போட்டியிட தமது மனசாட்சி இடம் தரவில்லை என்று அவர் கூறியுள்ளார். அப்துல் கலாமின் இந்த முடிவுக்கு சகோதரர் மற்றும் ஆசிரியர் அளித்த ஆலோசனையே காரணம் என்று கூறப்படுகிறது. அப்துல் கலாம் தனது 96 வயது சகோதரரான முத்துமீரான் மரக்காயர் மற்றும் ஆசிரியர் சின்னதுரை ஆகியோர் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளார். 

முக்கிய விஷயங்கள் குறித்து இவர்களிடம் ஆலோசனை நடத்துவது வழக்கம். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் கலாம் இவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களில் பல முறை அவர் இவ்வாறு ஆலோசனை நடத்தியிருக்கிறார். 

அப்போது மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அரசியல் கட்சிகள் உங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விடலாம். எனவே போட்டியிலிருந்து விலகியிருப்பதே சரியானது என்று அவர்கள் கூறியதாக தெரிகிறது. கலாமின் நெருங்கிய உறவினர்கள் பலரும் இதே கருத்தை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்துல் கலாம் மீண்டும் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்ததாக தெரிகிறது.

0 கருத்துகள்: