மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதை பாஜக நிறுத்த வேண்டும் அல்லது எங்களது கூட்டணியைக் கைவிடத் தயாராக வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கூறியுள்ளது.பாரதீய ஜனதா கட்சிக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் பொதுச் செயலாளர் சிவானந்த் திவாரி, இனவெறி அடையாளத்துடன் தேர்தலில் போட்டியிட்டால் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்க முடியாது
என்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தன்னுடைய கொள்கைகளில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்றும் கூறியுள்ளார்.மதச்சார்பற்றவரே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கூற்றை ஆதரித்துள்ள திவாரி, மோடிக்கு எதிரான ஐக்கிய ஜனதா தளத்தின் குரலை சற்றே உயர்த்தியுள்ளார்.
பாஜகவுக்கு வாக்களித்த மக்கள் வாஜ்பேய்க்காகவே வாக்களித்தார்கள். குஜராத் கலவரத்திற்குப் பின் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துவிட்டனர். காரணம் மக்கள் இனவாத அரசியலை விரும்பவில்லை. பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என விரும்பும் அக்கட்சியினர், இந்த உண்மையை உணர வேண்டும். இனவாத முகத்தை முன்னிறுத்துவதால் அவர்கள் ஆட்சிக்கு வர முடியாது என்றும் திவாரி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக