தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.6.12

ஆப்கான் தாக்குதலில் பொதுமக்கள் இறந்தமைக்கு மன்னிப்புக் கோரிய நேட்டோ


கடந்த வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தானில் தலிபா ன் இலக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எதிர்பா ராத விதமாகப் பல பொது மக்கள் கொல்லப் பட்டதற் கு ஒரு வாரம் கழித்து மன்னிப்பு கோரியுள்ளது நேட் டோ கூட்டுப்படை.கடந்த வாரம் தாக்குதல் நிகழ்த்தப் பட்ட லோகார் மாகாணத்துக்கு நேரடியாக விஜயம் செ ய்த, அமெரிக்க கப்பற்படையின் தளபதி ஜெனரல் ஜோ ன் அல்லென், அங்குள்ள கிராம மக்களிடம் இவ்வாறு மன்னிப்புக் கேட்டுள்ளார். விமானத் தாக்குதல் நடந்த லோகார்
மாகாணத்தின் வீடொன்றில் தலிபான்களின் முக்கிய தளபதி ஒருவர்
இருந்ததாக நேட்டோவினர் தெரிவித்த போதும், அதனை மறுத்துள்ள பொதுமக்கள் அவ்வீட்டில் முதல் நாள் திருமண வைபவம் ஒன்று நிகழ்ந்ததாகவும் அதனால் தாக்குதல் நடந்த போது அங்கு பல பெண்களும் குழந்தைகளும் குடியிருந்ததாகவும் கூறியுள்ளனர்.
 குறித்த வீட்டின் மேலே விமானத் தாக்குல் நடத்துவதற்கு அனுமதி கோரிய போது உள்ளே பல அப்பாவிப் பொதுமக்கள் இருந்ததாகத் தமக்கு அறிவுறுத்தல் கிடைக்கவில்லை என ஜெனரல் அல்லென் தெரிவித்துள்ளார்.

மேலும் இக் கொலைச் சம்பவம் விமானத் தாக்குதல் நடத்த முன்னமே தலிபான்கள் சரணடைந்திருந்தால் ஏற்பட்டிருக்காது எனக் கூறிய ஜெனரல், ஆரம்பத்தில் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தும் போது தமது தரப்பில் 3 இராணுவத்தினர் படு காயமுற்றனர் எனவும் இதன் பின்னரே தான் விமானத் தாக்குதலுக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இத்தாக்குதலில் 18 பொதுமக்கள் பலியாகிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகளும், பெண்களும் ஆவர்.

0 கருத்துகள்: