அணு ஆயுத தயாரிப்பை நிறுத்திக் கொள்வதாக ஈரான் உறுதி அளிக்கவில்லை என்றால், ஈரான் மீது போர் தொடுப்போம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் டேனியல் ஷாப்பிரோ கூறுகையில், இராணுவத் தாக்குதல் நடத்தாமல் வேறு சில கெடுபிடிகள் மூலமாகவே ஈரானை பணிய வைக்க முடியும். ஆனால் அவ்வாறு ஈரான் பணியவில்லை என்றால் ஈரானை தாக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன என்றார்.இஸ்ரேல்
பிரதமர் பெஞ்சமின் நெதான்யாஹீ தனியாக ஈரான் மீது போர் தொடுக்கலாம், அதற்கு வேண்டிய அனைத்து ஆயுத உதவிகளையும் அமெரிக்கா செய்யும் என ஒபாமா உறுதி அளித்துள்ளார்.
பிரதமர் பெஞ்சமின் நெதான்யாஹீ தனியாக ஈரான் மீது போர் தொடுக்கலாம், அதற்கு வேண்டிய அனைத்து ஆயுத உதவிகளையும் அமெரிக்கா செய்யும் என ஒபாமா உறுதி அளித்துள்ளார்.
அடுத்த வாரம் நடக்கவிருக்கும் கூட்டம் தான் ஈரானுக்கு அளிக்கப்படும் கடைசி வாய்ப்பு என்று அமெரிக்கா கருதுகிறது. அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் லியோன் பனேட்டா அமெரிக்காவின் திட்டங்கள் குறித்து விளக்கினார்.
இந்த ஆண்டு அமெரிக்கா இஸ்ரேலுக்கு 70 மில்லியன் டொலர் மதிப்பில் ஏவுகணை உதவி அளிக்கத் திட்டமிட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் 205 மில்லியன் டொலருக்கு ஆயுத உதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக