தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.5.12

அமெரிக்காவில் வெள்ளை இனத்தவர்களின் எண்ணிக்கை குறைகிறது: அதிர்ச்சி தகவல்


அமெரிக்காவில் வெள்ளை இனத்தவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது, இதற்கு பொருளாதார வீழ்ச்சியே காரணம் என சமூகவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவில் சிறுபான்மை இனத்தவரான ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கீசிய மொழி இனம் சார்ந்த ஹிஸ்பேனியரிடம் குழந்தை பிறப்பு குறைந்து வருவதால், அவர்கள் தமது சிறுபான்மை அந்தஸ்தை இழந்து வருகின்றனர்.வெள்ளை இனத்தவரான இந்த ஹிஸ்பேனிய
இனத்தவரின் குழந்தை பிறப்பு விகிதம் 2008ஆம் ஆண்டு முதல்
குறைந்து கொண்டே வருகின்றது என்று நியூ ஹேம்ப்ஷயர் பல்கலைகழகத்தின் கென்னத் ஜான்சன் தெரிவித்தார்.
புரூக்கிங்ஸ் நிறுவனத்தின் வில்லியம் பிரே இதுகுறித்து கூறுகையில், இனிவரும் காலங்களில் வெள்ளையர்களின் உழைக்கும் வர்க்கத்தினர் குறைந்து போவார்கள். உழைப்புக்காக ஆப்ரிக்க மக்களையும், ஆசிய மக்களையும் எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகும் என்றார்.
இதுமட்டுமல்லாமல் இளைஞர்களின் எண்ணிக்கை வெள்ளை இனத்தில் குறைந்து கொண்டே போகிறது. அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 1.1 மில்லியனிலிருந்து 4.4 மில்லியன் வரை உயர்ந்து விட்டது. 85 வயதுக்கும் அதிகமானோர் 5.7 மில்லியனாவர்.
தற்போது அமெரிக்காவின் சிறுபான்மை இனத்தவர்கள் 36.6 சதவிகிதம் ஆவார். எனவே இரண்டாம் இடத்தில் இருந்த ஆப்ரிக்க அமெரிக்க மக்கள் முதலிடத்தை பெற்றுள்ளனர்.

0 கருத்துகள்: