தன் மீதான ஹசாரே குழுவினரின் ஊழல் குற்றச் சாட்டுக்களை உறுதிப்படுத்தப்பட்டால் அரசியல் பொதுவாழ்விலிருந்து விலக தயாரென பிரதமர் ம ன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.பிரதமர் உட்பட ம த்தியில் உள்ள 15 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச் சாட்டுக்களை சுமத்தியிருந்தனர் ஹசாரே குழுவி னர். இந்நிலையில் மியன்மாரிலிருது நாடுதிரும்பி க்கொண்டிருந்த பிரதமரை விமானத்தில் சந்தித்த நி ருபர்கள் அவரிடம் ஹசாரேவின்
கருத்துக் கள் பற்றி கேள்வி எழுப்பினர்.
கருத்துக் கள் பற்றி கேள்வி எழுப்பினர்.
அப்போது பதில் அளித்த பிரதமர் 'என் மீதான குற்றச்சாட்டுக்கள் எதிர்பாராதவை. ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான தகவ்லகளை உறுதிப்படுத்திக்கொள்ளாது பொறுப்பற்ற முறையில் ஹசாரே குழுவினர் நடந்துள்ளனர். என் மீதான ஹசாரே குழுவினரின் ஊழல் குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தப்பட்டால் அரசியல் பொதுவாழ்விலிருந்து விலக தயாராக இருக்கிறேன் என்றார்.
கடந்த 2008-09 காலப்பகுதியில் மன்மோகன் சிங் மத்திய நிலக்கரித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த போது நிலக்கரி சுரங்கள் மிக குறைந்த விலைக்கு தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், சி.ஏ.ஜி. அறிக்கையிலும் இந்த விவகாரம் இடம்பெற்றிருப்பதாகவும் அன்னா ஹசாரே குழுவினர் குற்றம் சுமத்தியிருந்தனர். எனினும் பிரதமரை ஊழல் புரிந்தவர் என நான் கூறவில்லை. அவர் ஊழல் கரை படியாதவர் என்பதே எனது நிலைப்பாடு என ஹசாரே பின்னர் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இதேவேளை பிரதமர் மன்மோகன் சிங்கை ஒரு Shikhandi (பெண் பெயர் கொண்ட மகாபாரத கதாபாத்திரம்) என கூறிய கருத்துக்களை ஹசாரே குழுவின் பிரசாந்த் பூஷணும் வாபஸ் வாங்கியுளார். நான் Shikhadi என கூறவரவில்லை. ஆனால் அவரது தலைமைத்துவத்தின் கீழ் ஊழல் தலைவிரித்தாடும் போது அவர் தனிப்பட்ட வகையில் நேர்மையானவர் என்று சொல்லிக்கொள்வதில் என்ன பயன்? என்றார்.
இந்நிலையில் பூஷனின் கருத்துக்களை ஹசாரே குழுவின் உறுப்பினரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான சந்தோஷ் ஹெக்டே விமர்சித்துள்ளார். என்னதான் இருந்தாலும் பிரதமரை பார்த்து இப்படி மரியாதை குறைவாக பேசியிருக்ககூடாது என்றார் அவர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக