மியன்மாருக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொ ண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங் இன்று, மியன்மாரின் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சான் சூகியை சந்தித்தார்.நே ற்று திங்கட்கிழமை, மியன்மாரின் அதிபர் தெய்ன் செய் னை சந்தித்து பேசியிருந்த பிரதமர், 500 மில்லியன் அ மெரிக்க டாலர் பெறுமதியான Credit Line ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டிருந்தார். இதன் படி மியன்மாருக்கு இந்தி யா ரூ.2,750 கோடி கடன் தொகையாக
வழங்குவதற்கு இ ணங்கியுள்ளது.மேலும், எல்லை
பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தல், விமான சேவைகள், கலாச்சார பரிமாற்ற நடவடிக்கைகள் தொடர்பிலும் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.வழங்குவதற்கு இ ணங்கியுள்ளது.மேலும், எல்லை
இந்நிலையில் இன்று ஆங் சான் சூ கியை இன்று சந்தித்த பிரதமர் மியன்மார் அரசியல் முன்னேற்ற நடவடிக்கைகளில் ஆங் சான் சூ கியின் பங்கு முக்கிய வகிக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
மேலும், இந்தியாவுக்கு வருகை தருமாறும் ஆங் சான் சூ கியிக்கு அழைப்பு விடுத்தார். விரைவில் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக ஆங் சாங் சூ கியி பதில் அளித்தார். ஆங் சாங் சூ கியின் தாயார் 1960ம் ஆண்டு டெல்லிக்கான மியன்மார் தூதுவராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 1993ம் ஆண்டு இந்தியா ஆங் சான் சூ கியிக்கு ஜகவர்லால் நேரு விருது வழங்கி கௌரவப்படுத்தியிருந்தது.
1987ம் ஆண்டுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் மியன்மாருக்கு உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதன்முறையாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக