இதை தொடர்ந்து இந்து திருமண சட்டத்தில் மாற்றம் கொண்டுவர டெல்லி மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்ட திருத்தம் வரவிருக்கும் சட்டசபை கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த சட்டப்படி டெல்லிவாசிகள் அனைவரும் தங்கள் திருமணத்தை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். 60 நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்யாவிட்டால் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
தவறான தகவல் தருபவர்களுக்கு 3 மாத சிறை தண்டனை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மணமகன் அல்லது மணமகள் வசிக்கும் இடம் அல்லது திருமணம் நடந்த இடத்துக்கு அருகில் உள்ள பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். மணமக்களுடன் சாட்சி ஒருவர் பதிவு அலுவலகத்துக்கு வரவேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக