தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.5.12

கற்பழிப்பு வழக்கில் சிக்கினால் 7 ஆண்டுகள் கம்பி எண்ணுவது உறுதி: உச்ச நீதிமன்றம்

கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உறு திபட தெரிவித்துள்ளது. இதற்குமுன்பு, கற்பழிப்பு வழக்கு ஒன்றில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் இரு குற்றவாளி களுக்கு தண்டனையை குறைத்து தீர்ப்பளித்தது.இதை எ திர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இ வ்வழக்கு மீதான விசாரணையின் தீர்ப்பை விமர்சித்த உச்சநீதிமன்றம்,
குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படவேண்டும் என
தெரிவித்தது. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சூழலில் மட்டுமே தண்டை குறைக்கப்படலாம் எனவும் கருத்து தெரிவித்தது.


இத்தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எல்.சவுகான் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் வழங்கினர்.


கடந்த 2005 ம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ம் திகதி தலித் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: