தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.5.12

சிரியாவுக்கு ஆயுதம் வழங்கும் ஈரான் - ஐ.நா குற்றச்சாட்டு


நேற்று ஐ.நாவினால் வெளியிடப்பட்ட உத்தியோக பூர்வமா ன அறிவிப்பில் ஆயுத ஏற்றுமதிக்கான ஐ.நாவின் தடை உத் தரவை மீறி ஈரான் சிரிய அரசாங்கத்துக்கு ஆயுதம் வழங்கி உதவி செய்து வருவதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியு ள்ளது.இந்நிலையில் தனது நாட்டில் வெளிநாடுகளின் உத வியுடன் தனக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் மக்களு க்கு நேற்று சிரிய அதிபர் பஷார் அல் அஸாத் கடுமையாக கண்டனம் விடுத்துள்ளார்.சிரியாவில்
புரட்சியில் ஈடுபடும் போராளிகளுக்கு அண்மையிலுள்ளநாடுகளான லெபனான் மற்றும் துருக்கி ஆகியவையே ஆயுத உதவி செய்து வருகின்றன என அதிபர் பஷார் அல் அஸாத் 'ரஷ்யா 24' எனும் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் முன்னர் தெரிவித்திருந்தார். மேலும் இந்த ஆயுத கடத்தல்களைத் தடுப்பதற்கு மிக இலகுவாக எல்லைகளை மூடுவதன் மூலம் தீர்வு காண முடியாது என்ற போதும் இந்த ஆயுதப் பரவலை வேறு வழிகள் மூலம் தடுக்க முடியும் என்றும் அஸாத் கூறியுள்ளார்.

சிரியாவில் ஏற்பட்ட மக்கள் போராட்டம் அயல் நாடான லெபனானிலும் பரவியிருந்த சில நாட்களுக்கு உள்ளேயே சிரிய அரசுக்கு ஈரான் ஆயுத உதவி செய்வதை ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் கடந்த 14 மாதங்களாக நிகழ்ந்து வரும் மக்கள் புரட்சியில் இதுவரை  9000 பேர் மரணித்திருப்பதாக .ஐ.நா உம் 11 000 பேர் மரணித்திருப்பதாக போராளிகளும் தெரிவித்துள்ள வேளையில் சர்வதேச செய்தி நிறுவனமான CNN சிரிய வன்முறைகளில் இறந்த மக்களின் தொகையை உத்தியோக பூர்வமாகக் கணிப்பதற்கு சிரிய அரசு அனுமதிக்கவில்லை எனக் கூறியுள்ளது.

0 கருத்துகள்: