தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.5.12

பெண்ணுடன் மடத்தை விட்டு ஓடியதை நினைவில் கொள்ளட்டும் - அருணகிரி நாதர்!


மதுரை ஆதீனத்தின் 293 வது மடாதிபதியாக நித்யானந்தா நியமிக்கப் பட்டதற்கு மடாதிபதிகள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.நித்யானந்தா நியமனம் குறித்து கருத்து தெரிவித்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர்  '' நித்யானந்தா எப்போதும் ரஞ்சிதாவுடன் சுற்றித் திரிவதாகவும் நித்யானந்தா மதுரை ஆதீனமாக இருக்கத் தகுதியற்றவர் என்றும் கருத்து தெரிவித்து இருந்தார். ஜெயேந்திரரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஞ்சிதா ஜெயேந்திரர் மீது வழக்குத்
தொடர்ந்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் '' 1987 ம் ஆண்டு ஜெயேந்திரர் ஒரு பெண்ணுடன் மடத்தை விட்டு ஓடி விட்ட நிலையில் மடத்தின் மேலாளரையும் மகா பெரியவரையும் தொடர்பு கொண்டு பேசி விவரத்தைக் கேட்டறிந்து தலைக் காவிரியில் இருந்த ஜெயேந்திரரை தொடர்பு கொண்டு பேசி நீங்கள் நேரடியாக வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு பிரச்னையைத் தீர்க்க தாம் உதவியதையும் ஜெயேந்திரர் நினைவில் கொள்ளட்டும் '' என்று தெரிவித்துள்ளார். சவுக்கடியாக கேட்டுள்ளார்,

0 கருத்துகள்: