நீதிமன்றத்தின் தீர்ப்பை புறக்கணிக்க முயன்றாலோ, நீதித்துறையை கேலிக்கூத்தாக நினைத்தாலோ பிரதமர் கிலானியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம் செய்யப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பாகிஸ்தானின் தற்போதைய ஜனாதிபதி ஆசிப் அலி ஸர்தாரி, இவரது மனைவி பெனசிர் புட்டோ பிரதமராக
இருந்த காலத்தில் ஏராளமான ஊழல் பணத்தை சுவிஸ் வங்கிகளில் பதுக்கியதாக வழக்கு தொடரப்பட்டது.
இருந்த காலத்தில் ஏராளமான ஊழல் பணத்தை சுவிஸ் வங்கிகளில் பதுக்கியதாக வழக்கு தொடரப்பட்டது.
முஷாரப் ஜனாதிபதியாக இருந்த போது, அவசரச் சட்டத்தின் மூலம் இந்த ஊழல் வழக்கு ரத்து செய்யப்பட்டது. எனினும் இந்த அவசரச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாததால், ஸர்தாரி மீதான வழக்கை மீண்டும் விசாரிக்கும் படி பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், பிரதமர் யூசுப் ரசா கிலானிக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து நாட்டின் உயர் பதவியை வகிக்கும் ஸர்தாரி மீது ஊழல் தொடர்பான விசாரணை நடத்த முடியாது என பிரதமர் கிலானி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி தெரிவித்திருந்தார்.
“சட்டத்தின் முன் அனைவரும் சமம்” எனக் கூறிய உச்சநீதிமன்றம், ஸர்தாரி மீதான ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்கும் படியும், சுவிஸ் அரசுக்கு கடிதம் அனுப்பும் படியும் கிலானிக்கு உத்தரவிட்டது.
பிரதமர் கிலானி ஸர்தாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத காரணத்தால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தாத பிரதமர் கிலானி குற்றவாளியே என உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது. எனினும் அவருக்கு சிறைத் தண்டனை ஏதும் விதிக்கப்படவில்லை.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் குற்றவாளி என உத்தரவிட்ட பிறகும், கிலானி பிரதமர் பதவியில் நீடிப்பதற்கு எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த கண்டனத்திலிருந்து தப்பிக்க உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்ய கிலானி திட்டமிட்டிருந்தார்.
இதற்கிடையே நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அளித்த நேற்றைய தீர்ப்பில், பாகிஸ்தான் நீதித்துறையை கேலிக்கூத்தாக்க நினைத்தாலோ, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை புறக்கணிக்க முயன்றாலோ, பிரதமர் கிலானியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஐந்தாண்டு காலத்துக்கு தகுதி நீக்கம் செய்யப்படும் என எச்சரித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக