தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.5.12

ஆறு நீதிபதிகளைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஈராக் துணை அதிபர் துருக்கியில் தஞ்சம்.


ஆறு நீதிபதிகளை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, ஈராக் துணை அதிபர் தாரிக் அல் ஹாஷ்மியை ஈராக்கிடம் ஒப்படைக்கக்கோரி இன்டர்போல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சி முடிவுக்கு வந்த உடன், அமெரிக்காவின் துணையுடன் அங்கு ஜனநாயக ஆட்சி நடைமுறைப் படுத்தப்பட்டது. ஈராக்கின் துணை அதிபராக இருப்பவர் சன்னி பிரிவைசேர்ந்த தாரிக் அல் ஹாஷ்மி. பாக்தாத்தை சேர்ந்த ஆறு நீதிபதி

களை ஹாஷ்மியும் அவரது பாதுகாவலர்களும் கொன்று விட்டதாக, நீதித்துறை உயர்கவுன்சில் அதிகாரி அப்துல் சத்தார் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆறு நீதிபதிகளை கொன்றது தொடர்பான வழக்கு விசாரணை, கடந்த வாரம் பாக்தாத் கோர்ட்டில் துவங்கியது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகும் படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதற்கிடையே துணை அதிபர் ஹாஷ்மி, கத்தார், சவுதி அரேபியா பயணம் மேற்கொண்டு விட்டு தற்போது, துருக்கியில் தங்கியுள்ளார். நாடு திரும்பினால் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், இவர் நாடு திரும்ப மாட்டார் என, எதிர் பார்க்கப் படுகிறது.
அரசியல் உள்நோக்கத்துடன் தன் மீது இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளதாக ஹாஷ்மி தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஹாஷ்மியை ஈராக்கிடம் ஒப்படைக்கக்கோரி, 190 நாடுகளுக்கு சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

0 கருத்துகள்: