தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டதையடுத்து ஏற்பட் டுள்ள அசாதாரண சூழ்நிலையை சுமுகமாக ரீதியாக தீ ர்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருகின்ற து என சவூதி அரேபியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள் ள இலங்கையின் இஸ்லாமிய அறிஞரான அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.குறித்த விவகாரம் தொடர்பி ல் அரசாங்கத்தின் முயற்சியினால் ஒரு திருப்பதியான தீர்வினை விரைவில் பெற
முடியும் என நம்புவதாக அகில இலங்கை ஜம் இயதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி; குறிப்பி ட்டார்.
உலக முஸ்லிம்களில் அதிக செல்வாக்கு மிக்க முதல் 500 பேர்களில் ஒருவராக தெரிவான றிஸ்வி முப்தி, கடந்த வெள்ளிக்கிழமை றியாத் நகரில் இலங்கை முஸ்லிம் சமூக உறுப்பினர்களுடன் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்பு செயலாளர் அப்துல் காதர் அல் மஷுர் மௌலானாவும் கலந்துகொண்டார்.
இப்பிரச்சினையை பாதிக்கப்பட்ட தரப்பினரினது பொறுமை மற்றும் சமாதானத்தின் மூலம் சுமூகமாக தீர்ப்பதற்காக முஸ்லிம்கள் பிரார்த்தனையில் ஈடுபடுவது எமது கடமை என றிஸ்வி முப்தி குறிப்பிட்டார்.
குறித்த சம்பவத்தினையடுத்து பாதுகாப்பு தரப்பினரினால் பள்ளிவாசல் சீல் வைக்கப்பட்டது. எனினும் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி மற்றும் கைத்தொழில் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆகியோரின் முயற்சியினை பலனாக மறுநாள் குறித்த பள்ளிவாசல் மீள்திறக்கப்பட்டது என அவர் தெளிவுபடுத்தினார்.
எந்தவித இடையூறுமின்றி சமாதானமாக அடுத்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையும் இடம்பெற்றது என அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னர், நகர அபிவிருத்தி திட்டங்கள் சிலவற்றுக்காக கண்டி நகரிலுள்ள லைன் பள்ளிவாசலை உடைப்பதற்கு கண்டி மாவட்ட முஸ்லிம்கள் அனுமதி வழங்கினர். இதேபோன்று, நிமல் வீதி பள்ளிவாசலுக்கு அருகில் நெருஞ்சாலை நிர்மாணத்துக்கு இடமளிப்பதற்காக, பள்ளிவாசலுக்கு ஒதுக்கப்பட்ட காணியிலிருந்து வெகு தூரத்தில் பள்ளிவாசலை நிர்மாணித்தோம் என அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி மேலும் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக