அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான FBI சமீபத்தி ல் உலகில் இணையப் பயன்பாட்டில் அதிகரித்து வரும் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் போன்ற தளங்க ளை குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கவும் உளவு செய் யவும் பயன்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. மேலு ம் இந்நடவடிக்கையை எவ்வளவு விரைவாகக் கைக் கொள்ள முடியுமோ அவ்வளவு துரிதமாக இதைச் செய ற்படுத்தப் போவதாகவும் அறிவித்துள் ளது.இணையத் தில் மிகப் பெரிய
நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக், யாஹூ, மற் றும் கூகிள் ஆகியவற்றின் வலைத்தளங்களைக் குற்றவாளிகளை கண்கானி க்க உதவும் மேற்பார்வை பணிக்கு பயன்படுத்தவுள்ள FBI இதற்காக இந் நிறுவனங்களின் உதவியைக் கோரியிருந்தது. மேலும் மேற்பார்வைப் பணிக்காக இத்தளங்களில் பின்புறமாக(வெளியே தெரியாமல்) நுழைவாயில்களைக் கட்டமைப்பதற்கு இந் நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டாது என நம்புவதாக FBI கூறியிருக்கின்றது.

இன்றைய நவீன தகவற் தொழிநுட்ப உலகில் கணனியில் இணையப் பயன்பாடும் தொலைபேசியின்றி தூரத்திலுள்ளவர்களுடன் உரையாடக் கூடிய வசதியும் பெருகியிருப்பதால் முன்பு போல் FBI ஆல் தொலைபேசியை ஒட்டுக் கேட்பதன் மூலம் மட்டுமே குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க முடியாதுள்ளது. இதனேலேயே மென்பொருள் தொழிநுட்பம் மூலம் இணைய உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் நுழைவாயிலை ஏற்படுத்த FBI தீவிரம் காட்டி வருகின்றது.
எனினும் FBI இன் இம் மும்மொழிவு பல கோடிக் கணக்கான பொதுமக்களின் தனியுரிமை பறிக்கக் கூடியது என்பதுடன் இது 1994 ஆம் ஆண்டு அமுல் படுத்தப் பட்ட CALEA எனப்படும் தகவற் தொழிநுட்பம் தொடர்பான சட்டத்துக்கு உட்படாதது ஆகும். அதாவது CALEA சட்டம் தொலைபேசி மற்றும் தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கு பொருந்தும் என்ற போதும் இணைய நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்த போதும் இணைய வலைப் பின்னல்களுக்கான Broadband எனும் இண்டர்நெட் இணைப்பு சேவையை வழங்கும் கம்பெனிகளுக்காக இந்த CALEA திட்டம் 2004 ஆம் ஆண்டு விரிவு படுத்தப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக