இஸ்ரேல் தூதரகம் திறக்கப்படுவது குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆழ்ந்த வேதனையை தெரிவிக்கும் அதேவேளை, இதனை மிக வன்மையாகக் கண்டிக்கிறது என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:“இஸ்ரேல், பலஸ்தீனர்களை
அநியாயமாகக் கொன்று குவிப்பது மாத்திரமன்றி, முஸ்லிம்களின் புனிதத் தலங்களில் ஒன்றான பைத்துல் முகத்தஸை ஆக்கிரமித்துள்ள நிலையில், இலங்கைக்கான இஸ்ரேலிய தூதரகம் திறக்கப்படுவதானது, முஸ்லிம் சமூகத்தை மிகவும் வேதனை கொள்ளச் செய்கிறது. முஸ்லிம் அரபு நாடுகளோடு நட்புறவு கொண்டுள்ள நம் நாட்டுக்கு இச்செயல் ஆரோக்கியமானதல்ல என்பதாகவே ஜம்இய்யத்துல் உலமா கருதுகிறது.
பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவரான மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இவ்விடயமாக நல்லதொரு முடிவை எடுக்க வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கிறது.”
0 கருத்துகள்:
கருத்துரையிடுக