இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வை விரைவுபடுத்தும் விடயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து நெருக்கமாகப் பணியாற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.இந்தியா சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனுக்கும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின்போது இந்த முடிவு எட்டப்பட்
டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தப் பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் இலங்கை இனப் பிரச்சினை விடயத்தில் இனிவரும் காலங்களில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவதன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நீதியான தீர்வு கிடைப்பதற்கு வழி ஏற்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இனப் பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுகளைத் துரிதப்படுத்துவதற்கும் தமிழ் அரசியல் கட்சிகளைப் பேச்சு மேசைக்கு அழைத்து வருவது தொடர்பில் பொது நிலைப்பாடு ஒன்றை எடுப்பதற்கும் இருநாட்டுத் தலைவர்களும் இணங்கியுள்ளனர்.
இனிவரும் காலங்களில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும் இந்தச் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமர் செயலக வட்டாரங்கள் மேலும் கூறின.
பிரதமருடனான சந்திப்பின்போது இலங்கை இனப்பிரச்சினை விடயம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் அதிக அக்கறை காட்டியதாகவும் அந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக