தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.4.12

ஆப்கானில் இருந்து ராணுவத்தை முன்னரே வாபஸ் பெறுவோம் – ஆஸ்திரேலியா!


மெல்பர்ன்:முன்னர் அறிவிக்கப்பட்ட காலத்திற்கு ஒருவருடம் முன்பாகவே ஆப்கானிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெறுவோம் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு இறுதியில் தங்களின் ராணுவம் ஆப்கானிலிருந்து வாபஸ் ஆகும் என்று ஆஸ்திரேலிய ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.1550 ஆஸ்திரேலிய ராணுவத்தினர்
தற்பொழுது ஆப்கானில்உள்ளனர். இவர்கள் 2014 ஆம் ஆண்டு இறுதியில் வாபஸ் பெறுவார்கள் என்று ஆஸ்திரேலியா முன்னர் அறிவித்திருந்தது.
அமெரிக்கா தலைமையிலான ஆப்கான் ஆக்கிரமிப்பு துவங்கிய பிறகு 32 ஆஸ்திரேலிய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ராணுவம் ஆப்கானில் நீடிப்பதற்கு ஆஸ்திரேலியாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நேட்டோ கூட்டணிக்கு வெளியே மிக அதிகமான ராணுவ வீரர்களை அனுப்பிய நாடு ஆஸ்திரேலியா ஆகும்.
மத்திய உருஸ்கான் மாகாணத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஆஸ்திரேலிய ராணுவம் ஆப்கான் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.
அடுத்த மாதம் 20-ஆம் தேதி ஷிக்காகோவில் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டில் வாபஸ் பெறுவது தொடர்பாக ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாயுடன் ஒப்பந்த செய்துக்கொள்ளப்படும் என கருதப்படுகிறது.
உரூஸ்கான் மாகாணத்தின் கட்டுப்பாட்டை ஆப்கானிஸ்தான் ராணுவத்தினரிடம் ஒப்படைக்கும் தேதியை கர்ஸாய் உடனடியாக அறிவிப்பார். குறைந்த எண்ணிக்கையிலான ராணுவத்தினரை 2014 க்கு பிறகும் ஆப்கானில் நிறுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக கில்லார்ட் கூறினார்.

0 கருத்துகள்: