உலகிலேயே மிகப்பெரிய பயங்கரவாத நாடாக திகழ்கின்ற இஸ்ரேல் ஃபலஸ்தீன் நாட்டின் பிஞ்சு குழந்தைகளை கொன்று வருகிறது, ஃபலஸ்தீனர்களை அவர்களது சொந்த மண்ணிலிருந்து விரட்டி அடித்து வருகிறது. இறையாண்மையோடு செயல்படுகின்ற பிற நாடுகளை அணு ஆயுதங்களை கொண்டு மிரட்டி வருகிறது. இஸ்ரேலிய உளவுத்துறையினர் நமது நாட்டிற்குள் ஊடுறுவி ஃபாசிஸ சக்திகளுக்கு வலு சேர்த்து வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக செயல்படுகின்ற இஸ்ரேலுடனான எல்லா உறவையும் மத்திய அரசு கைவிடவேண்டும் என்பதை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உட்பட பல இயக்கங்கள் ஒன்றினைந்து பாராளுமன்றம் நோக்கி பேரணி நடத்த இருக்கின்றது.
இஸ்ரேலுடனான உறவு தேசத்திற்கும் மிகப்பெரும் அபாயமாகும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சரமாகவும் அமையவிருக்கின்ற இப்பேரணி, இந்தியாவில் தீவிரவாதம் என்கிற பெயரில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவதையும் சுட்டிக்காட்ட இருக்கின்றது.
சமீபத்தில் புதுடெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பிற்கு பிறகு இஸ்ரேல் எவ்வாறு பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட்டு வருவதை நம்மால் காண முடிகிறது. இஸ்ரேலின் தூண்டுதலினால் மூத்த பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டதை பார்க்கும் போது இந்தியாவில் ஜியோனிஸ சக்திகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ஒடுக்க வேண்டும் என்ற ரீதியிலேயே இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
இஸ்ரேல் நாட்டினால் நமது தேசத்திற்கு ஏற்பட இருக்கும் ஆபத்தினை மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்பேரணி நடைபெறும். எனவே பெரும் திரளான மக்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நாள் : 26 ஏப்ரல் 2012
காலை சரியாக 10 மணி அளவில் ராம்லீலா மைதானம் அருகே தொடங்க இருக்கும் இப்பேரணி ஜந்தர் மந்தரில் நிறைவடையும். அதனை தொடர்ந்து மாபெரும் பொதுக்கூட்டமும் நடைபெற இருக்கின்றது.
அனைத்து இயக்கங்களையும் ஒன்றினைத்து "மூவ்மென்ட்ஸ் ஃபார் சிவில் ரைட்ஸ்" என்ற அமைப்பை ஏற்படுத்தி இந்த பேரணி நடைபெற இருக்கிறது.
இதில் உறுப்பினர்களாக சேர்ந்திருக்கின்ற இயக்கங்கள் பின் வருமாறு:
1. ஆல் இந்தியா மில்லி கவுன்சில்
2. ஆல் இந்தியா கான்ஃபிடரேஷன் ஆஃப் SC & ST
3. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
4. மஸ்ஜிதே உலமா ஹிந்த்
5. ராஷ்டிரிய உலமா கவுன்சில்
6. ஆல் இந்தியா மஜ்லிஸே முஷாவரத்
7. ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்
8. ஷியா பாய்ன்ட்
9. குதாய் கித்மத்கர்
10. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா
11. ஏ.பி.சி.ஆர்
12. என்.சி.ஹெச்.ஆர்.ஓ
13. கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
14. டெமாக்ரடிக் ஸ்டூடன்ட்ஸ் யூனியன்
15. அம்பேத்கர் சமாஜ்வாதி பார்ட்டி
16. ஜாமியா நகர் கோர்டினேஷன் கமிட்டி
17. வஹ்ததே இஸ்லாமி
18. ராஷ்டிரிய தலித் கிராந்தி மோட்சா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக