ஆப்கானில் செயல்பட்டு வரும் "முல்லா தாதுல்லாஹ்" குழு தாலிபான்கள், கொஸ்த் மாகாணத்தில், நேட்டோ படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளனர்.அதில் அமெரிக்க கூட்டுப்படை வீரர்கள், 23 நபர்கள் இருந்ததாகவும், அனைவரும் இறந்து
விட்டதாகவும்தாலிபான்கள் அறிவித்தனர். இது போன்ற பின்னடைவான தருணங்களில், அமெரிக்க கூட்டுப்படைகள் இது போன்ற சம்பவங்களை, விபத்து என்றே அறிவிக்கின்றனர். ஆனால் வெள்ளியன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக தாலிபான்களின் இந்த அறிவிப்பை, நேட்டோ படைகள் இன்னும் மறுக்கவில்லை . இதற்க்கு முன்னர், 2011 ஆகஸ்டில் ஒரு ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டு, அதில் 31 வீரர்கள் பலியான சம்பவத்தை, முதலில் விபத்து என்றே அறிவித்தது நேட்டோ. விசாரணைக்கு பிறகு, அது தாலிபான்களால் தான் சுட்டு வீழ்த்தப்பட்டது, என்று ஒப்புக்கொண்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக