தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.3.12

சிரியா – போராளிக்குழுக்களை ஒற்றுமைப்படுத்த முயற்சி

சிரியாவில் உள்ள போராளிக்குழுக்களை ஒற்றுமைப் ப டுத்துவதற்கான முயற்சியில் படைத்துறை ஜெனரல் றி யாட் அல் ஆஸாட் ஈடுபட்டுள்ளதாக இன்று துருக்கியி ல் இருந்து வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன. சிரி யாவில் தற்போது இருபதுக்கும் மேற்பட்ட போராளிக் கு ழுக்கள் சர்வாதிகாரி ஆஸாட்டுக்கு எதிராக களமிறங்கி யுள்ளன. ஆனால் இவர்களுக்கிடையில் ஒற்றுமை நில வாத காரணத்தால்
ஆஸாட்டுக்கு எதிரான போராட்டத் தை அடுத்தபடிக்கு முன்னேற்ற முடியாமலிருக்கிறது. இந்தப் பின்னடைவில் மாற்றத்தை ஏற்படுத்த சிரிய போராளிக் குழுக்களில் சர்வதேச ஆதரவு பெற்ற, அல் காய்தா தொடர்பற்ற நான்கு சிரிய போரானிக்குழு முயன்றுள்ளது.

எப்படி லிபியாவில் பல்வேறு போராளிக் குழுக்களும் ஒரு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி, பணிகளை பிரித்தெடுத்து போராடி வெற்றி பெற்றனவோ அதேபோல சிரியாவிலும் ஓர் போராட்டக்குழு உயர் ஆணையம் அமைக்கப்பட்டு, அதனடிப்படையில் பணிகள் முடுக்கிவிடப்பட வேண்டுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சிரியாவில் உள்ள நான்கு பிரிகேட் படையணிகளின் ஜெனரல்கள் இப்போது போராளிக் குழுக்களுடன் இணைந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சிரிய போராட்டக் குழுக்களுக்கு சவுதி, கட்டார் போன்ற நாடுகள் தே வையான நவீன ஆயுதங்களை வழங்குவதற்கு சம்மதித்துள்ளன. ஆயுதங்கள் இருந்தாலும் போராட்டம் சரியான பாதையில் நெறிப்படுத்தப்பட்டால் மட்டுமே அடுத்த கட்டத்திற்குள் நுழைய முடியும் என்பது தெரிந்ததே. சரியாக நெறிப்படு த்துவார்களாக இருந்தால் சிரிய அதிபர் ஆஸாட்டுடைய நாட்கள் எண்ணப்பட ஆரம்பித்துவிடும்.
இதேவேளை தென்கிழக்கு துருக்கியில் குர்டிஸ்தானிய போராளிகளுக்கு எதிரான தாக்குலை துருக்கியப் படைகள் மேற்கொண்டு சுமார் 15 குர்டிஸ் தானிய போராளிகளை சுட்டுக் கொன்றுள்ளன. மேலும் ஆப்கான் கந்தகார் நகரில் நேற்று இடம் பெற்ற வீதிக்கண்ணி வெடியில் ஒன்பது படையினர் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் மட்டும் நேட்டோவுடன் சிறிய தொடர்புடையவர் மற்றவர்கள் அனைவரும் ஆப்கான் படையினராகும்.

0 கருத்துகள்: