தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.11.11

ஊழல் குற்றச்சாட்டு : குவைத் பிரதமரை பதவி விலகுமாறு உத்தரவு : நாடாளுமன்றமும் கலைகிறது


முடிவை வரவேற்கும் பொதுமக்கள்
குவைத் பிரதமர் ஷேக் நஸீ முஹ்மது அல் - அஹ்மது ஷாபா மீது ஊழல்குற்றச்சாட்டு எழுந்துள்ளதை அடுத்து அவரை உடனடியாக பதவி விலகுமாறு, குவைத் மன்னர் உத்தரவிட்டுள்ளார்.கடந்த 2006 ம் ஆண்டு முதல் குவைத் பிரதமராக இருந்து வரும் ஷேக் நஸீர், ஊழல் மூலம் அரசு பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டு சுமத்தின.
மேலும் அக்கட்சிகள் ஒன்றிணைந்து நேற்று மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியும் நடத்தின.

ஏற்கனவே மத்திய கிழக்கு நாடுகளில் மக்கள் புரட்சி மூலம், 30, 40 ஆண்டுகால ஆட்சி அதிகாரமே புறந்தள்ளப்பட்டுள்ளதால் குவைத்திலும் அவ்வாறானதொரு அரசியல் சூழல் உருவாகி விட கூடாது என்பதில் கவனம் செலுத்திய மன்னர் ஷேக்-ஷபா அல்-அகமது அல்-ஷபா உடனடியாக உயரதிகாரிகளுடன் அவசர கூட்டத்தை கூட்டினார்.

இக்கூட்டத்தின் முடிவில் பிரதமர் பதவியிலிருந்து நஸீர் முகமது உடனடியாக பதவி விலகுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அமைச்சரவையை ராஜினாமா செய்து, நாடாளுமன்றம் கலைப்பதற்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: